செயற்கை சூரியனை உருவாக்கிய நாடு சீனா !

சீனா விஞ்ஞானிகள் செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கி 60 நொடிகள் வரை ஜொலிக்க வைத்து சாதித்த சம்பவம் அறிவியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
செயற்கை சூரியனை உருவாக்கிய நாடு சீனா !
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் தலை சிறந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழு இந்த சாதனியை வெற்றிகரமாக நிகழ்த்தி யுள்ளனர்.

இதற்கென்று nuclear reactor plasma எனப்படும் கட்டமைப்பை உருவாக்கி அதன்வாயிலாக 50 மில்லியன் கெல்வின்ஸ் வெப்பத்தை அதிகரிக்க செய்தனர். 

அதாவது சூரியனின் மைய பாகத்தில் இருக்கும் வெப்பத்தை விடவும் 3 மடங்கு இது அதிகம் என்று கூறப்படுகிறது.

சூரியனின் மைய பகுதியில் இருக்கும் வெப்பத்தின் அளவானது 15 மில்லியன் கெல்வின்ஸ் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கணக்கு. சீன விஞ்ஞா னிகள் உருவாக்கிய வெப்பமானது நடுத்தர அளவிலான வெப்பாற்றல் எனவும் கூறப்படுகிறது.
பிளாஸ்மா இயற்பியலில் தலைசிறந்த விஞ்ஞானிகள் குழு பிளாஸ்மா எனப்படும் சூரியனின் மைய வெப்பத்தை உருவக்கி இந்த சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இது எதிர் காலத்தில் செயற்கையான சூரிய சக்தியை உருவாக்க சீனாவுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் உலக அளவில் சீனா இந்த விவகாரத்தில் முன்னோடியாக திகழும் வாய்ப்பை உருவாக்கி யுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
Tags:
Privacy and cookie settings