தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுவதாக அப்பல்லோ மருத்துவ மனை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்தத் தகவல் கிடைத் ததுமே தமிழகத் தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்ட ர்கள் அப்பல்லோவு க்கு படை யெடுத்தனர். தொடர் சிகிச்சை யின் பலனாக அவர் உடல் தேறி வந்தது.
விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர் பார்க்கப் பட்டது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
ஜெயலலிதா விற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் பட்டார் ஜெயலலிதா.
அங்கு அவரது உடல் நிலை மிகவும் கவலைக் கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித் திருந்தது. இதனால், அதிமுக தொண்ட ர்கள் மற்றும் தமிழக மக்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.