சாயம் கலந்த உணவு பொருட்கள் உடல் நிலையை பாதிக்கும் !

3 minute read
நிர்ணயிக்கப் பட்ட அளவிற்கு கூடுதலா கவும், ஆடைகளு க்கு பயன் படுத்தும் கெமிக்கல் வண்ணங் களும் பயன் படுத்துவ தால், அதை விரும்பி சாப்பிடுபவர் களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சமீபகால மாக தயாரிப் பாளர்கள் பலர், வாடிக்கை யாளர்களை கவர வேண்டும் என்பதற் காக, தாங்கள் தயாரிக்கும் உணவு பொருட் களில் பல்வேறு வண்ணங் களை கலக்கின்றனர். 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல் களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத் திலும், வண்ண சாயங்கள் கலக்கப் படுகின்றன. 

நிர்ணயிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக வண்ண ங்கள் சேர்ப்ப தால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.
இயற்கை மற்றும் செயற்கை வண்ண த்தை பயன் படுத்திய வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள் பலர், சமீபகால மாக விலை மலிவு, 

பலன் அதிகம் என்பதற் காக, துணி களுக்கு சாயம் ஏற்ற பயன் படுத்தும் கெமிக்கல் வண்ண ங்களை உணவு பண்ட ங்களில் சேர்க்கி ன்றனர். 
இது போன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவ தால், குழந்தைகள் கடுமை யாக பாதிக்கி ன்றனர். நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறிய தாவது: 

உணவு பொருட் களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ண ங்கள் கலக்கப் படுகின்றன. 

பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளே வின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ண ங்களை உணவு பொருட்களில் பயன் படுத்தலாம். 

சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ண த்தையும் பயன் படுத்தலாம். 
செயற்கை வண்ணத்தை பொறுத்த வரை, சிவப்பில் பான்சியோ போராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, 

நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங் களையே உணவு பொருட் களில் சேர்க்க வேண்டும். 

அதிலும், ஒவ்வொரு பண்டங்க ளுக்கும் நிர்ணயிக்கப் பட்ட அளவில் மட்டுமே வண்ணங் களை சேர்க்க வேண்டும். 
நிர்ணயித்த அளவுக்கு கூடுத லாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட் களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தை கள் என அனைவ ருக்கும்,


கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர், பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப் பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்தி ருப்பது உறுதி யானால், 

அதை தயாரித் தவர்கள், விற்பவர் களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 

1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். “உணவு பாதுகாப்பு சட்டம் 2006′ இன்னமும் நடை முறைக்கு வர வில்லை. 
அந்த சட்டம் அமலாக்கம் செய்யப் பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோ ருக்கு லட்சக் கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப் புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.
Tags:
Today | 9, April 2025
Privacy and cookie settings