கொழுப்பு வயிற்றில் மட்டுமல்ல, கழுத்தில் சேர்ந்தாலும் இதய நலன் பெருமளவு பாதிக்கப் படுகிறது என பிரேசில் ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழுத்தின் சுற்றளவு தடிமன் அதிகரித்தால் அவர்கள் சீரான இடைவேளையில் இரத்த அழுத்தம்,
இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பரிசோதனைகள் செய்துக் கொள்வது நல்லது எனவும் கூறியுள்ளனர்.
பெரும்பாலும் உடல் பருமன் அதிகரிப்பதால் தான் நீரிழிவு, இதய நலன் குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன என நாம் அறிந்திருப்போம்.
ஆனால், பிரேசில் ஆராய்ச்சி யாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் மூலம் நமது கழுத்து பகுதியில் கூட கொழுப்பு அதிகமாக சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப் பட்டுள்ளது.
உங்கள் மேற்சட்டையின் காலர் பொத்தானை போடுவதில் சிரமமாக இருக்கிறதா? மிக இறுக்கமாக இருக்கிறதா?
அப்போது நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள்.
தடிமனான கழுத்து கொண்டுள்ள வர்களுக்கு இதயக் கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது என பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதிகரிக்கும் ஒவ்வொரு அங்குலமும் இதய நலனை பாதிக்கலாம் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
பிரேசில் ஆராய்ச்சி யாளர்கள் நடத்திய ஆய்வில் 4,000 ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
கழுத்தில் சுற்றளவு சராசரியாக 15 அங்குலம் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்களை தான் இந்த ஆய்விற்கு இவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
15 என்ற அளவை சராசரியாக கொண்டு பிரேசில் ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வை துவங்கினர்.
வெறும் ஒரு இன்ச், அதாவது 16 அங்குலம் கழுத்து சுற்றளவு கொண்டவர் களுக்கே பெருமளவில் இதய நோய்கள் உண்டாகிறது என ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
ஒரு அங்குலம் அளவு கழுத்தின் தடிமன் அதிகரிப்பதே 32% வரையிலான இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கவும், 24% அவரை இரத்த அழுத்தம் அதிகரிக் கவும்,
50% வரையில் உயர் ட்ரைகிளிசரைடுகள் உண்டாகவும் காரணியாக இருக்கிறது என ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் இதனால் 22% அளவு உடலில் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன என பிரேசில் ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.
கழுத்தை சுற்றி அதிகரிக்கும் / தேங்கும் கொழுப்பானது கரோட்டிட் தமனிகளில் தடை உண்டாக காரணியாக அமைகிறது.
இதன் காரணத்தி னால் தான் இதய கோளாறு அதிகரிக்க நேரிடுகிறது என பிரேசில் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.
இதயம் மட்டுமில்லாது இது தோள்பட்டை பகுதியின் தசைகளில் வலுவினை குறைக்கவும் காரணியாக இருக்கிறது.
கழுத்தின் சுற்றளவு 15.3 அங்குலத்திற்கு மேலாக இருப்பவர்கள், சீரான இடைவேளையில் இரத்த சர்க்கரை அளவு,
கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் எடுத்துக் கொள்ளுங்கள் என ஆய்வாளர்கள் அறிவுரைக் கின்றனர்.
மேலும், 15 அங்குலத்திற்கு மேலான கழுத்து சுற்றளவு கொண்டவர் களுக்கு மூன்றுக்கும் மேற்ப்பட இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.