பலாப்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு... எச்சரிக்கை !

தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன.
பலாப்பழம்


எச்சரிக்கைகள்

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.

* இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கி விடும்.

*எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்று விட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகி விடும்.


* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடு வதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர் களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்ற வற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனி களையும் சாப்பிட்டு சீரணமாக வில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். 

இதனை போக்க துவரம் பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.
Tags:
Privacy and cookie settings