நடுவானில் கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு அபராதம் !

0
இந்தியாவில் விமானங்களி லிருந்து மனித கழிவுகளை காற்றில் வீசும் விமான நிறுவனங் களுக்கு, 50,000 ரூபாய்அபராதம் விதிக்கப் படும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
நடுவானில் கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு அபராதம் !
டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விமானங்கள் அதன் கழிவுகளை கொட்டுவதாக மனுதாரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விமானங்களில் உள்ள கழிவறைகள் சிறப்பு தொட்டிகள் மூலம் மனித கழிவுகளை சேகரிக்கும்.பொதுவாக விமானங்கள் தரையிறங் கியதும் கழிவுகள் அகற்றப்படும். 

ஆனால், நடுவானில் கழிவறைகளில் உள்ள கழிவுகள் கசிய வாய்ப்பு ள்ளதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

வானில் பறக்கும் போதும் அல்லது விமான நிலையத்திற்கு அருகிலும் விமானங்கள் கழிவுகளை வெளியிட கூடாது என்பதை 

விமான போக்குவரத்து ஒழுங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மனித கழிவுகள் நடுவானிலிருந்து ஏன் விழுகிறது?
விமானங்களில் மனித கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகள் காலியாக உள்ளதா என்பதை கண்காணிக்க, தரையிறங்கும் போது முன்னறிவிப் பின்றி சோதனை நடத்தப்பட வேண்டும் என்று 

சுற்றுச் சூழல் நீதிமன்றமான தேசிய பசுமை தீர்ப்பாயம், விமானப் போக்குவரத்து ஒழுங்கு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சுற்றறிக்கையை மீறும் விமானங்கள், அதாவது தரையிறங்கும் போது கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகள் காலியாக இருந்தால் 

அவற்றிற்கு சுற்றுச் சூழல் இழப்பீடாக 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் விமான நிறுவனங்கள் மனித கழிவுகளை டெல்லியின் குடியிருப்பு பகுதிகளில் திணிப்பதாக குற்றம் சாட்டி போடப்பட்ட மனுவிற்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு மேலே பறக்கும் விமானங்களிலிருந்து வீசப்பட்ட கழிவுகள் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளின் தரைகள் மற்றும் சுவர்களில் சிதறியதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த கழிவுகள் பறக்கும் விமாங் களிலிருந்து வந்தவையா என்பது இறுதியாக முடிவாக வில்லை.
மனுதாரரின் மனுவை ஆராய்ந்த விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமானங்களில் சிறப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், 

அவை தரை யிறங்கியதும் விமான நிலைய குழுக்களால் சுத்தம் செய்யப்படுவது தான் வழக்கம் என தெரிவித் துள்ளது.

அரிதான அவசரக்கால நடவடிக்கையாக எரிப்பொருள் தொட்டியை காலி செய்யும் சூழ்நிலைகளை தவிர கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகள் அரிதாகவே நடுவானில் காலியாக்கப் படும் என்று மூத்த விமானி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

விமான கழிவறைகளில் அதிகப் படியான கழிவுகள் சேரும் இடத்தை சுற்றி உறைய வைக்கப்பட்ட மனித கழிவுகள் சேர்ந்து அவை பூமியில் விழும்.
நாற்றத்தை குறைக்கவும், அவைகளை உடைக்கவும் ரசாயனங்கள் சேர்க்கப் படுவதால் அவை ப்ளூ ஐஸ் என்று அழைக்கப்படும். இந்த ப்யூ ஐஸ் மிகவும் அரிதானவை. ஆனால், இது வரை கேள்விப் படாதவை அல்ல.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings