வெளி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை தாரை வார்க்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க விருக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இன்டியானாவில் உள்ள கேரியர் நிறுவனத்தில் தொழிலாளர்க ளைச் சந்தித்து உரையாடிய அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
கேரியர் நிறுவனம் வெளிநாட்டிற்கு வழங்கி வந்த சுமார் ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பை உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதை பாராட்டிய அவர்,
அமெரிக்கர்க ளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்நாட்டு தொழில் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதை முன் மாதிரியாகக் கொண்டு பிற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் தொழில் நிறுவனங் களுக்கு வரி குறைப்பு சலுகைகளை நடை முறைப்படுத்த உள்ளதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும்
அமெரிக்க நிறுவனங்கள் பொருள்களை இறக்குமதி செய்ய வரிவிதிப்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலில் தான் வெற்றி பெற உதவியாக இருந்த இன்டியானா வாக்காளர் களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Thanks for Your Comments