சின்னத்திரை காமெடியில் கலக்கும் மதுரை முத்து, சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந் தாலும், தன்னுடைய அடுத்தக் கட்டப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவி லும் தன்னுடைய திறமையைக் காண்பிக்க ஆரம்பித்தி ருக்கிறார். ஒரு மதிய இடை வேளையின் போது அவரிடம் பேசினோம்,
எதுக்கு உங்க மேல இவ்வளவு வதந்தி?
அது தான் எனக்கும் தெரியல. எது எப்படி இருந்தாலும், என்னைச் சுற்றி இருக்கிற வங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னோட முதல் மனைவி யைப் பத்தியும் தெரியும்.
முதல் மனைவி பற்றிய சில தேவை யில்லாத வதந்தி களை நான் எதிர் பார்க்கவே இல்லை. அவங்களு க்கு கடவுள் பக்தி அதிகம். கோயில் கோயிலா அடிக்கடிப் போவாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.
ஆனா, அவங்களுக்கு பக்தி விஷயத்துல ஈடுபாடு அதிகமா இருந்தது. அப்படி கோயிலுக்குப் போகும் போது தான் விபத்து ஏற்பட்டிருக்கு. அவங்க மேல நான் அவ்வளவு பாசம் வச்சிருக் கேன்.
அதனால தான் ஃபேஸ்புக்ல அவங்களப் பத்தி உருக்க மானப் பதிவு போட்டேன். என்னோட அம்மாவு க்கு 77 வயசாகுது. அவங்க ளுக்கு சர்க்கரை நோய் இருக்கு. அப்பாவு க்கு 85 வயசாகுது. அவருக்கு ஹார்ட் பிராப்ளம்.
இப்படி அவங்களப் பாத்துக்கிறதே கஷ்டமா இருக்கும் போது, இரண்டு பெண் குழந்தை களையும் பார்க்க வேண்டியிருக்கு. உண்மை யில், அதனால தான் திருமணம் பற்றி முடி வெடுக்க வேண்டி யதாப் போச்சு.
நான் ஃபேஸ்புக்ல முதல்ல போட்ட மாதிரி திருமணம் ஆனது உண்மை தான். என்னோட குழந்தைகளை பராமரிப் பதற்காகத் தான் அந்த முடிவை எங்க வீட்ல எடுத்தாங்க.
நிறைய பேர் இதை தவறா எடுத்துக் கிட்டதால் தான் ஃபேஸ்புக்ல இருந்து அந்த போஸ்டை நீக்கிட்டேன். நீங்க இரண்டா வது திருமணம் செய்து கொண்ட பெண் பற்றி?'
அவங்க பேர் நீத்தி. என் மனைவி யோட பெஸ்ட் பிரண்ட் இவங்க. இப்போ மதுரையில பல் மருத்துவரா இருக்காங்க. சின்ன வயசுலயே அவங்க அப்பா, அவங்கள விட்டுச் சென்றதால, அம்மா வளர்ப்புல வளர்ந்தாங்க.
அதனாலயே அவங்க ளுக்கு, 'நம்மள மாதிரி இந்த குழந்தைகளும் பாசம் இல்லாம வளர்ந்துடக் கூடாது. அவங்கள பாத்துக்கிறதுக் காகவாவது திருமணம் செய்துக்கிறேனு' சம்மதிச்சாங்க.
அவ்வளவு படிப்பு, வசதி இருந்தும் மனித நேயத்தோடு ஏத்துக் கிட்டது தான் பெரிய விஷயமா நான் பார்க்கிறேன்.
என்னோட முதல் மனைவி லேகா என்கின்ற வைய்யம்மாள் உயிரோட இருக்கும் போதே அடிக்கடி இரண்டு குழந்தை களும் இவங்க வீட்டுப் போகும்.
அவங்களும் எங்க குழந்தைகள் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தாங்க. இப்போ அவங்கள திருமணம் செய்து கொண்ட பிறகு, என்னோட இரண்டா வது பொண்ணு முத்ரா கிளாஸ் பர்ஸ்ட் வந்திருக்காங்க.
முதல் பொண்ணு யாழினியும் இரண்டாம் வகுப்புல நல்லாப் படிக்கிறாங்க. இரண்டு பேருக்குமே வீட்ல டியூசன் சொல்லித் தராங்க நீத்தி.