ரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழ ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொகலேட் ஆலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Fedortsovo எனும் நகரில் குறித்த சொகலேட் ஆலை செயல்பட்டு வருகிறது. குறித்த சம்பவத்தின் போது 24 வயதான ஸ்வெத்லான ரோஸ்லின என்பவர்
உருகிய நிலையில் இருந்த சொகலேட் அண்டாவில் வேறொரு பாத்திரத்தில் இருந்து சேர்வை பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து வந்துள்ளதாக கூறப் படுகிறது.
அப்போது திடீரென்று கொதி நிலையில் இருந்த அந்த சொகலேட் அண்டாவுக்குள் இவர் தவறி விழுந் துள்ளதாக கூறப் படுகிறது.
ஆனால், சொகலேட் அண்டாவின் அருகாமையில் நின்று கொண்டு தமது மொபைலில் பேசிக் கொண்டிருந்த போது,
அந்த மொபைல் குறித்த அண்டாவு க்குள் தவறிய தாகவும், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இவர் தவறி விழுந்துள் ளதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில் அவர் சேர்வை பொருட்களை கலந்து கொண்டிரு க்கையில் தான் தவறி விழுந்து இறந்து ள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கலவையில் விழுந்த ஸ்வெத்லான ரோஸ்லினாவின் உடலை அந்த கலவையில் இருந்து பிரித்து எடுக்க முடிய வில்லை எனவும்,
சொகலேட் கலவையின் வெப்பத்தால் அவரது உடல் கரைந்தி ருக்கலாம் எனவும், அவரது ஒரு கால் மட்டுமே எஞ்சியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர். விபத்துக் குள்ளான பெண்மணிக்கு கணவரும் 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Thanks for Your Comments