ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க உதவும் கூகுள் !

0
ரூபாய் நோட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அருகிலுள்ள ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க புதிய வசதி ஒன்றினை ஏற்படுத்தி யுள்ளது.
ஏடிஎம் மையங்களைக் கண்டுபிடிக்க உதவும் கூகுள் !
கருப்புப்பண த்தை ஒழிக்கவும், கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கை யாகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்து ள்ளது.

இந்த முடிவால் சாமானியர்கள், தங்கள் கையிலுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நாடு முழுவது முள்ள ஏடிஎம் மையங் களில் பெரும் பாலானவை இயங்காத சூழலில், பணம் இருப்பு உள்ள ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலை மோதுவதை யும் நாம் காணலாம்.

மக்களின் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இணையத்தின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், தனது ஹோம் பேஜில் புதிய வசதியினை அறிமுகப் படுத்தி உள்ளது.

சர்ச்பார் எனும் தேடுதலுக்கான வார்த்தை களை உள்ளீடு செய்யும் இடத்துக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஃபைன்ட் ஆன் ஏடிஎம் நியர் யு (Find an ATM near you) வசதி மூலம் அருகிலுள்ள ஏடிஎம் மையங்களை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் மேப் உதவியுடன் அளிக்கப்படும் இந்த வசதி மூலம் அருகிலுள்ள வங்கிக் கிளை களையும் நெட்டிசன்கள் உடனடி யாக அறிந்து கொள்ளலாம். 

இந்த வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் ஏற்கனவே இருந்தாலும், முக்கியத்துவம் கருதி கூகுள் ஹோம் பேஜுல் கொண்டு வரப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings