டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமை யில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப் படாமல் டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை ஏப்ரல் 1, 2017-ம் ஆண்டிலிருந்து அமல் படுத்துவதில் மத்திய அரசு உறுதி யாக உள்ளது.
அதை நடை முறைக்கு கொண்டு வருவதிலுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கு பெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடை பெற்றது.
அதில் சில அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப் படாத தால் அக்கூட்டம் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. பின்னர் இந்த கூட்டம் டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது.
அதன்படி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் டெல்லி யில் நேற்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இன்று காலையில் மீண்டும் கூட்டம் தொடங்கி யது. திருத்தப் பட்ட ஜிஎஸ்டி வரைவு மசோதா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.
திருத்தப் பட்ட வரைவு ஜிஎஸ்டி சட்டம், ஐஜிஎஸ்டி சட்டம், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டம் ஆகியன மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.
இந்த சட்டங்கள் குறித்து தற்போது நடை பெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத் தில் இறுதி செய்யப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் கூட்டத் தில் சுமுக முடிவு எட்டப் பட வில்லை. எனவே, ஜிஎஸ்டி கவுன்ச லின் அடுத்த கூட்டம் டிசம்பர் 11 மற்றும், 12ம் தேதிகளில் நடை பெறும் என கூறி ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments