கையை நீட்டாதே.. எச்சரித்த ஜெயா.. ஆட்டம் போட்ட சசி !

தமிழக அரசியல் வரலாற்றில் உடன்பிறவா சகோதரியாக வந்து இன்று அரசியல் கட்சியையே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் சசிகலா.
கையை நீட்டாதே..  எச்சரித்த ஜெயா..  ஆட்டம் போட்ட சசி !
ுதன் முதலாக 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனபோது.சசிகலா தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

சுதாகரன் தத்து எடுப்பு, பிரம்மாண்ட திருமணம். போன்ற எண்ணற்ற வாரிகுவிக்கும் சம்பவத்தால் மீண்டும் நடந்த தேர்தலில் ஜெ ஆட்சியை இழந்தார்.

அவர் மீது பல்வேறு வழக்குள் போடப்பட்டது. அதிமுகவில் சசிகலா உறவினர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் ஒருவர் வேட்பாளராக முடியும்.

கட்சி பதவிக்கும் அப்படியே, இட மாற்றத்திற்கும் அப்படி தான். அமைச்சர்களாக நீடிக்க வேண்டும் என்றால் சின்னம்மா சொல்வதை கேட்க வேண்டும்.

இப்படிதான் ஒரு முறை ஜெயலலிதாவிடம் சசி ஒரு அமைச்சரை சொல்லி அவர் நல்லவர் நம்மிடம் மிகவும் விசுவாசமாக உள்ளார் என்றார்.

சசி இல்லாத போது அந்த அமைச்சரை தனியாக அழைத்து என்ன நடக்குது என்று கேட்டுள்ளார். தயங்கிய அமைச்சரிடம் சசியை பற்றி வரும் தகவல்கள் சரியாக இல்லையே என்ன உண்மை தான சொல்லுங்க என்றுள்ளார்.
அம்மாவே உண்மையை கேட்கிறார் என்று எண்ணிய அவர் சசியை பற்றி குறை சொன்னார். அவர் சொல்லி முடிப்பதற்குள்ளே ஜெயலலிதா, சசி வெளியே வாடி. இது தான் உன்னிடம் உள்ள விசுவாம் என்று கூறினார்.

அதன்பின் அந்த அமைச்சர், அமைச்சர் பதவி, கட்சி பதவி என அனைத்தையும் இழந்தார். அப்போதே சசி கையை நீட்டாதே உனக்கு அரசியல் தெரியாது என்று எச்சரித்தார் ஜெயலலிதா.

அதன் பின்பு தான் தனக்கு சரியில்லாத வரை கட்சிக்கே சரியில்லாத வராக சித்தரித்து கட்டம் கட்டும் வேலையை சசி செய்து ஆட்டம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings