என் புருஷனுக்கு யாரும் இல்லை.. வேலைக்காரி.. அந்தக் கணவனை !

அந்த டாக்டர் பெயர் கீர்த்தனா..! திருமணம் ஆகி ஐந்து வருடங்களில் தனது கணவனை ஒரு விபத்தில் பறி கொடுத்தாள். அம்மா மட்டும் கூட இருந்தார். நல்ல வசதி. சொந்தமாக பெரிய மருத்துவமனை.
என் புருஷனுக்கு யாரும் இல்லை
குண்டூரில் நல்ல பெயரோடு விளங்கும் மருத்துவமனை அது.கைராசி டாக்டர் என்று கீர்த்தனா பெயர் வாங்கி இருந்தார். 

கீர்த்தனாவிடம் சாமுண்டீஸ்வரி என்கிற பெண் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக வேளைக்கு வந்தாள். 

துறுதுறுவென அழாகான பெண். படு சூட்டிகையாக வேலை பார்ப்பாள். தூக்கம் என்பதே இல்லாமல் எபோதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பாள். 

அவளுக்கு இருபது வயது ஆன போது உறவினர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். சொந்த அத்தை மகன். கார்பெண்டர் வேலை பார்ப்பவன். 

அழகான இளைஞன். டாக்டர் கீர்த்தனாவே பொறுப்பேற்று திருமணம் செய்து வைத்தார். 

இனி வேலைக்கு வராதே. கணவனோடு குடும்பம் நடத்து என்று கூறி நல்ல வசதி பண்ணிக் கொடுத்து கண்கள் கலங்க அனுப்பினார் கீர்த்தனா. போய் ஒருவாரம் கூட ஆகவில்லை. 
சாமுண்டீஸ்வரியும், கணவனும் வந்தார்கள். என்னாச்சு என்று கேட்டார் டாக்டர் கீர்த்தனா? உங்களை விட்டு வர மனசு இல்லை டாக்டர். சாமு அழுதிட்டே இருக்குது. 

இந்தப்புள்ள உங்க வீட்டுல இருக்கட்டும். நான் சனிக்கிழமை வந்து கூட்டிட்டுப் போறேன்..என்றான் அந்த பையன் மணி. டாக்டரை ஓடிப்போய் கட்டிகொண்டு அழுதாள் சாமுண்டி. 

கீர்த்தனாவும் அழுது விட்டாள். தப்புடி போய் உன் குடும்பத்தைப் பாருடி என்றாள்..! .மணி கொஞ்சமும் யோசிக்காமல் நீங்களும் எங்க குடும்பம் தான் டாக்டரம்மா..என்றான். 

ஆடிப் போனாள் கீர்த்தனா. சனிக்கிழமை கூடிப் போவான் மணி. திங்கள் கிழமை காலை கொண்டு வந்து விட்டு விட்டுப் போய் விடுவான். 

ஒரு நாள்.. ஒரு இரவில்.. சாமுண்டி அலறினாள். அலறித்துடித்து எழுந்தாள் கீர்த்தனா. வயிறு வலி..உடனே அவரது ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். 

நிறைய சோதனைகள் செய்தாள்..! அடுத்த நாள் கதறியபடி ஓடி வந்தான் மணி. குடும்பமே ஓடி வந்து விட்டது. 
மறுநாள் மாலை சாமுண்டிக்கு இரைப்பை கேன்சர் என்று தெரிய விக்கித்து நின்றாள் கீர்த்தனா. நொறுங்கி போனாள். 

சாமுண்டி வயிறு வலி எடுக்கும் போதெல்லாம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு விட்டு யாரிடமும் சொல்லாமல் விட்டுள்ளார். 

நோய் முற்றி இருந்தது. மணிக்கு தயங்கியபடி விஷயத்தைக் கூறினாள். ஆஸ்பத்திரியே இடிந்து விழுவது போல கதறினான். 

எப்படியாவது என் சாமுவை காப்பற்றுங்கள் டாக்டர் என்று அழுதான். இரண்டு மாதங்கள் கடும் முயற்சிகள். டாக்டர்கள் கை விரித்து விட்டனர். 

சாமுண்டிக்கும் தனக்கு ஏதோவொரு நோய் என்பதைத் தெரிந்து கொண்டாள். முடியெல்லாம் கொட்டி கிழிந்த நாராகக் கிடந்தாள் அழகுப் பெண் சாமுண்டி. 

ஒரு நாள் பலகீன குரலில் கீர்த்தனாவை அழைத்தாள் சாமு. என் புருஷனுக்கு யாரும் இல்லை, டாக்டரம்மா.. அது குழந்தை…பசின்னாக் கூட கேக்காது..! 
அதை கை விட்றாதிங்க டாக்டரம்மா என்று முணகினாள். கீர்த்தனா அழுகையை அடக்க முடியாமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்..! மணி நிலை குலைந்து போய் விட்டான்..! 

அடுத்த இரண்டாவது நாள் மணியை அனாதையாக விட்டு விட்டு சாமுண்டீஸ்வரி செத்துப் போனாள்..! மணி மயங்கிச் சரிந்தான். மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தான்..! 

ரண்டு மாதங்கள் ஓடியது.. மணியின் வீட்டின் முன் கார் நின்றது..கீர்த்தனா இறங்கினாள். மணியின் அப்பா அம்மாவிடம் பேசினாள். 

சாமுவிற்கு செய்து கொடுத்த சத்தியம் பற்றிக் கூற மணியை கையோடு அனுப்பி வைத்தார்கள்..! தனது வீட்டில் ஒருவனாக மணியை வைத்துக் கொண்டாள்..! 
அவன் உடைந்து போய் இருந்தான்..அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர ஒரு நாள் இரவு அவனை மடியில் போட்டுக் கொண்டாள்.. 

கொஞ்சம் கொஞ்சமாக அவனை மீட்டெடுத்தாள்…! தோழியாக, ஒரு டாக்டராக மணிக்கு தனது உடம்பைக் கொடுத்த கீர்த்தனா. 

மூன்று வருடங்களுக்குப் பின் அவனை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டாள். எட்டு வயது மூத்தவள் கீர்த்தனா. 

அதனால் என்ன அன்பிற்கும், தியாகத்திற்கும் வயது ஏது..? (பெயர்,ஊர் மாற்றப் பட்டுள்ளது)
Tags:
Privacy and cookie settings