மனிதர்களுக்கு இல்லாத அறிவு | Humans lack the knowledge !

1 minute read
மனிதர்க ளுக்கு ஐந்து புலனறி வுகள் மட்டுமே உண்டு. ஆறாவது பகுத்தறிவு என்பது மரபான நம்பிக்கை. மரத்துக்கு ஓரறிவு தொடுதல்; நத்தை களுக்கு இரண்டறிவு - தொடுதல், சுவை; எறும்பு களுக்கு மூன்றறிவு - தொடுதல், சுவை, முகர்தல்; 
தேனீக் களுக்கு நான்கறிவு -தொடுதல், சுவை, முகர்தல், பார்வை; பாலூட்டி களுக்கு ஐந்தறிவு - தொடுதல், சுவை, முகர்தல், பார்வை, கேட்டல் போன்ற வை உண்டு. இவற்றைத் தாண்டி மனிதர் களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உண்டு.

இந்த இடத்தில் சில உயிரினங் களுக்குக் குறிப்பிட்ட ஒரு அறிவு- உணர் திறன் அதிகமாக இருப்ப தையும் குறிப்பி ட்டாக வேண்டும். எடுத்துக் காட்டாக, பல பாலூட்டி களுக்குப் பார்வையை விட மோப்பத் திறன் அதிகம்.

ஆனால், மனிதர்க ளுக்கோ முகரும் திறன் ஒப்பீட்ட ளவில் குறைவு. மனித மூதாதை களின் வாழ்க்கை முறை காரண மாக, இந்த இழப்பு ஏற்பட்டி ருக்கலாம்.

ஐந்துக்கு மேல்

பகுத் தறிவை விடுத்து, நமக்கு உள்ள மற்ற புலனறி வுகள் ஐந்து என்பது மரபான நம்பிக்கை. ஆனால், நம்முடைய புலனறி வுகள் ஐந்தோடு நின்று விட வில்லை என்று நவீன கால விஞ்ஞா னிகள் கூறுகி றார்கள். 

நம்முடைய அறிவு அதாவது உணர்ச்சி களை அறியும் திறனை எப்படி வகைப் படுத்தினாலும், ஐந்து அறிவுகளை விட அதிகமா கவே நமக்கு உண்டு என்பது தான் அறிவியல் பூர்வ உண்மை.

இப்படிப் பட்ட மரபு சாராமல் நமக்கு உள்ள உணர் திறன்கள் என்று எடுத்துக் கொண்டால் வலியை உணரும் தன்மை (nociception), வெப்பத்தை உணரும் தன்மை (thermoception), 

நகரும் போதும்- நடக்கும் போதும் உடலைச் சமநிலை யில் வைத்தி ருக்கும் தன்மை (equilibrioception). இப்படி நமக்குள்ள கூடுதல் அறிவுத் துறை களைப் பட்டியலி டலாம்.

மனிதர்களு க்கு இல்லாதது

மனிதர் களைப் போலவே உயிரினங் களுக்கும், மரபாக வகுக்கப் பட்ட அறிவுத் துறை களைக் காட்டிலும் கூடுதல் அறிவுகள் உண்டு. 

பல உயிரினங் களால் மின்காந்தப் புலம் (பறவைகள்), நீர் அழுத்தம், நீரோட்டம் (கடல் வாழ் உயிரின ங்கள்) போன்ற வற்றை உணரும் அறிவு உண்டு. இந்த அறிவு எதுவும் மனிதர்க ளுக்குக் கிடையாது.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings