எரித்திரியா நாட்டில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய சட்டம் நடை முறைக்கு வந்துள்ளது.
அவ்வாறு திருமணம் செய்யா விட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித் துள்ளது.
எரித்திரியா நாட்டில் மொத்த மக்கள் தொகை 4 மில்லியன் களாகும். கடந்த 1998-2000 ஆண்டுக் காலப் பகுதிகளில் அங்கு நடைபெற்ற யுத்தம் காரணமாக 150 000 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரழந்தனர்.
இதன் காரணமாக அங்கு ஆண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.இந்த நிலைமை காரணமாக அங்குள்ள பெண்கள் திருமணம் செய்வதற்கு ஆண்கள் பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனை எவ்வாறு ஈடு செய்யலாம் என நினைத்த அந்நாட்டு அரசு இந்த வியத்தகு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு ஆண் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்தால் அவருக்கு பண உதவியும், வீட்டு வசதியும் செய்து கொடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Thanks for Your Comments