உங்கள் கணினி பாதுகாப்பாக உள்ளதா?

ஒரே ஒரு வாரண்ட் மூலம் அமெரிக்க உளவு நிறுவன மான எஃப்.பி.ஐ. 120 நாடுகளில் உள்ள 8 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களை ஹேக் செய்துள்ள தாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
உங்கள் கணினி பாதுகாப்பாக  உள்ளதா?
அமெரிக்க ராணுவத் தலைமை யகமான பெண்டகனில் எஃப்.பி.ஐ தலைமையகம் அமைந்து ள்ளது. 

அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் களை ஹேக் செய்வதற் காக பிரத்யேக வல்லுனர்கள் குழு இருக்கிறது.

இந்த நிலையில், குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் இணையதளம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி யில் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ சர்வரில் இருந்து 

13 நாட்களுக்கு செயல் பட்டதாக எஃப்.பி.ஐ. அமைப்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரிப் பதற்காக அந்நாட்டு நீதிமன்ற த்தில் இருந்து வாரண்ட் பெற்ற எஃப்.பி.ஐ., 120 நாடுகளில் உள்ள 8,000- த்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களை ஹேக் செய்துள்ளது.

நீதிமன்றத்தில் அந்த அமைப்பு சார்பாக தாக்கல் செய்யப் பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ள தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி யுள்ளது.

ஒரே ஒரு நீதிமன்ற வாரண்டைப் பயன் படுத்தி 120 நாடுகளில் உள்ள கம்யூட்டர் களில் ஊடுருவ எஃப்.பி.ஐ-க்கு அனுமதி யார் கொடுத்தது என்று அமெரிக்காவி லேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings