முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கேரள பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தமிழக மக்களின் மனதை மிகவும் புன்படுத்த கூடியதாக அமைந்து ள்ளது. கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் முகநூலில் பதிவில் கூறிய தாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் யுகம் முடிவடைவதன் மூலம் தமிழக அரசியலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்.
தனிநபர் வழிபாடு, மாநில உணர்வை அடிப்படையாக கொண்ட திராவிட அரசியல் மெதுவாக தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தை நோக்கி வரும் என்று நாம் எதிர் பார்க்கலாம்.
மேலும் தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வத்தின் கீழ் அதிமுகவால் அதிக காலம் நீடிக்க முடியாது. என்ன வாயினும், நாம் காத்திருப்போம்.
இவ்வாறு அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்து கேரளாவில் உள்ள பலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.