ஜெயலலிதா உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது என்ற செய்தியை டிவியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரிய சாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா வுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
மேலும், இன்று அவரது உடல் நிலை கவலைக் கிடமாக இருக்கிறது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது.
இந்தத் செய்தியை டிவியில் பார்த்து கொண்டி ருந்த பெரிய சாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப் பட்டியைச் சேர்ந்த அதிமுக பிர முகரான இவர், குட்டுப்பட்டி அதிமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்தார்.
ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்ததில் இருந்து கவலை யுடன் காணப்பட்ட இவர், இன்று ஜெயலலிதா விடன் உடல் கவலைக் கிடம் என்ற செய்தியை டிவியில் பார்த்துக் கொண்டி ருந்தார்.
அப்போது, அவரால் ஜெயலலிதா குறித்த செய்தியை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்து வர்கள் கூறியுள்ளனர்.
இவருக்கு நாச்சம்மாள் என்ற மனைவி உள்ளார். டிவி பார்த்துக் கொண்டி ருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெரியசாமி உயிரிழந்து ள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.