முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் 15 பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி யுள்ளன.
கும்பகோணம் பகுதியில் 7 அரசு பேருந்துகள் உள்பட 2 தனியார் பேருந்துகளின் கண்ணாடி களும் உடைக்கப்பட்டன.
அடையாறில் இருந்து தாம்பரம் செல்லும் அரசு பஸ் மீது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி சேதப்படுத்தி யுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து போயின.
சென்னை யில் இன்று இயங்கிய 15 அரசுப் பேருந்து களின் கண்ணா டிகள் உடைக்கப் பட்டன. சாந்தோம் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவன பேருந்து மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப் பட்டது.
கல்வீச்சுக் குள்ளான பேருந்து நிலை குலைந்து அருகில் உள்ள லைட் போஸ்டின் மீது மோதி பலத்த சேத மடைந்தது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் கூட
இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நடந் துள்ளது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.