முகத்தில் எண்ணெய் வழிகிறதா?

முன்பெல்லாம் கோடைக் காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இப்போதோ அனைத்து காலங் களிலும் வெயில் கொளுத்து வதால், சரும பிரச்சனை களும் நீடித்து அழகு பாழாகிக் கொண்டே போகிறது. 

மேலும் எந்நேரமும் முகத்தில் எண்ணெய் வழிந்த வாறும் இருக்கிறது. இதனால் முகம் கருமை யாக காட்சி யளிக்கும். இதனைத் தடுக்கவே முடியாதா என்று பலர் கேட்கலாம். 

நிச்சயம் முகத்தில் எண்ணெய் அதிகம் வழி வதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

இங்கு அவற்றில் சக்தி வாய்ந்த மற்றும் விரைவில் பலன் தரக்கூடிய சில இயற்கை வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் அழகை அதிக ரித்துக் கொள்ளு ங்கள்.

மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதைத் தடுக்கும்.

அதற்கு மஞ்சள் தூள் சிறிது எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். 

இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம். பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். 

இப்படி வாரத்தி ற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள் நீங்குவ தோடு, எண்ணெய் பசையும் கட்டுப் படுத்தப்படும். எலுமிச்சை சருமத்தை புத்துணர்ச்சி யடையச் செய்யும். 

மேலும் சருமத்தின் pH அளவை தக்க வைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன் படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவி, ஏதேனும் மாய்ஸ் சுரைசர் தடவ வேண்டும்.

வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப் படும்.

தினமும் பப்பாளியை சிறிது அரைத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகம் பிரகாசமாக இருக்கும்.

தக்காளி யில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத் துளை களை இறுக்க மடையச் செய்து, எண்ணெய் வழி வதைக் கட்டுப் படுத்தும். 

அதற்கு தக்காளி யை அரைத்தோ அல்லது ஒரு துண்டை எடுத்தோ, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை உங்கள் வீட்டில் இருந்தால், அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.

தினமும் கற்றாழை யை முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவி வர, எண்ணெய் பசை கட்டுப் படுத்தப் பட்டு, முகம் பொலி வோடு காணப்படும்
Tags:
Privacy and cookie settings