ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஜித்தின் புகைப் படங்களை வைத்து கிண்டல் செய்யப்பட, அதற்கு சாந்தனு காட்டமாக பதிலளித் துள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படப்பிடிப் புக்காக பல்கேரியா வில் இருந்தார் அஜித்.
அங்கிருந்து சென்னை திரும்பி, மறைந்த தமிழக தலைவர் ஜெயலலிதா வின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்ட இடத்தில் புதன்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தியவுடன் அஜித் - ஷாலினி தம்பதி யினரோடு போலீஸ் அதிகாரிகள் செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை முன் வைத்து பலரும் கிண்டல் செய்த தொடங் கினார்கள்.
தொடர்ச்சியாக கிண்டல் செய்யவே நடிகர் சாந்தனு, கிண்டலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
விமான நிலையத் திலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்துக்கு நேராகச் சென்றார் என்பதை மரியாதை யுடன் பாருங்கள்.
அவர் இதயபூர்வமாக நடந்து கொள்பவர் என்பதை இதன் மூலம் காட்டியி ருக்கிறார். ரசிகர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண் டுள்ளார்.
வெளித் தோற்றத்துக்கு சிரிப்பதும், அழுவதும் உள்ளுக் குள்ளும் அப்படியே இருக்கும் என்று அர்த்தமில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார் சாந்தனு.
சாந்தனுவின் இந்தக் கருத்துகள், தற்போது சமூக வலைத் தளத்தில் பெரும் பாராட்டைப் பெற்றி ருக்கிறது.
அஞ்சலி செலுத்தியவுடன் புதன் இரவே பல்கேரியா வுக்குத் திரும்பி விட்டார் அஜித் என்பது குறிப்பிடத் தக்கது.