சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலக த்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச் சரும், அதிமுக பொதுச் செயலாளருமான
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வர வழைக்கப் பட்டனர்.
எம்எல்ஏ க்கள் கூட்டம் மாலையே தொடங்கும் என்பதால் அவர்கள் ராயப் பேட்டை யில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குழுமினர். ஆனால், நிதி யமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
மற்றும் மூத்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அப்போலோ மருத்துவ மனையில் இருந்து வர தாமதம் ஆனதால் கூட்டம் தொடங்க வில்லை.
இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே தங்கி யிருக்குமாறு அறிவு றுத்தப் பட்டிருந்தது.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவ மனையிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குத் திரும்பிய தால், எம்எல்ஏ க்கள் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.