தமிழகத்தி ற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் மோடி உறுதியளித் ததாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித் துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மோடி கிளம்பிச் சென்ற பிறகு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை, சசிகலாஜி ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
தமிழகத்தி ற்கு எந்த உதவி தேவைப் பட்டாலும், எந்த நேரமாக இருந்தாலும் மத்திய அரசு அதைச் செய்து தரும் என்று முதல்வர் பன்னீர் செல்வத் திற்கு உறுதி யளித்தார் மோடி என்றார்.