அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது.
நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்பட வில்லை.
அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது.
சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் வளர்த்து வருகின்றனர்.
அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது.
குழந்தையை கொஞ்சி விளையாடு வதிலும், அதற்கு சோறூட்டுவ திலும், முத்த மிடுவதிலும், அவளை பராமரிப்பதி லும் பெற்ற தாயை போலவே நானி நடந்து கொள்கிறது.
இதே போல் கடந்த மாதம், ரெயில்வே உயர் மின்னழுத்தக் கம்பியில் சிக்கிய குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி திடீரென ரெயில்வே தண்ட வாளத்தில் விழுந்தது.
இதைப் பார்த்த பயணிகள் அது இறந்து விட்டதென்று நினைத்து அச்சமடைந்த வேளையில் ஓடி வந்த நட்பு குரங்கு அதை தண்டவாளத்தி லிருந்து தூக்கி இழுத்து ஓரமாகக் கொண்டு வந்தது.
பின் அதை நன்றாகக் குலுக்கி ஆசுவாசப் படுத்தியது.
அதோடு நிற்காமல் தண்டவாளங் களுக்கிடையே தேங்கி யிருக்கும் தண்ணீரில் அதை முக்கியது. ஒரு கட்டத்தில் அதற்கு சுய நினைவை வரச்செய்வதற் காகக் கடிக்கக்