அன்று ஜெயலலிதாவை தொடர்ந்து.. அண்ணன் மகள் | Niece Jayalalithaa on.. Continue !

தமிழக அதிமுக அரசியலில் அரசியல் சதிகாரணமாக தலைவர் களுக்கு மிகவும் நெருக்க மானவர்கள் கூட ஓரம் கட்டப்படுவது அவமானப் படுத்துவது வழக்கமாகி விட்டது.
அன்று ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கொள்கைப் பரப்பு செயலாளராக உயர்ந்து. எம்.ஜி.ஆர். உடல் நலக் குறைவாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது தலைவர்கள் எம.ஜி.ஆரை ஆக்கிரமித்து கொண்டு ஜெ., வை பார்க்க விட வில்லை.

எம.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்தின் போது ராணுவ வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டு, தள்ளிவிட்டு அசிங்கப் படுத்தப் பட்டார் ஜெயலலிதா.

அடுத்து சென்ற வண்டியில் கூட அவர் அனுமதிக்கப் படவில்லை. அன்று ஜெயலலிதா பட்ட அவமானத் திற்கு போராடி அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தின் தாயாக மாறினார்.

இன்று ஒரே ரத்த சொந்தம் அண்ணன் மகள் தீபா தனக்கு அரசியல் வேண்டும், ஆட்சி அதிகாரம் வேண்டும், அரசியல் வாரிசாக வேண்டும் என்று கேட்க வில்லை.

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். கட்சியை தன்வசப்படுத்த நினைக்கும் சிலர் அவரை அனுமதி க்காமல் விரட்டி அடித்தனர்.

ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப் பட்ட போது அருகில் கூட நிற்க விடாமல் போலீசை விட்டு துரத்தினர். இரண்டு நாள் கழித்து சமாதியில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

இது போல ஜெயலலிதா வின் குடும்ப த்திற்கு தொடருது அவமானம். வரலாறு மீண்டும் திரும்புமா என எதிர் பார்க்கின்றனர் அதிமுகவினர்.
Tags:
Privacy and cookie settings