பூப்பெய்ததும் மும்பை போகணும் !

ராஜஸ்தானில்' ராஜ்நாட்' என்ற ஒரு சமூகத்தில் ஒரு கொடுமை யான பழக்கம் இருக்கிறது. பெண் குழந்தைகள் பூப்பெய்தி யவுடன் பாலியல் தொழிலில் ஈடுபட மும்பைக்கு அனுப்பி வைக்கப் பட்டு விடுவார்கள்.

காலம் காலமாக இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள், பாலியல் தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.  நாம் எப்படி வேலை தேடி உறவிர் களிடமோ நண்பர்களிடோ செல்கிறோமோ...

அதுபோல நாஜ்நாட் சமுக பெண்கள் மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தங்கள் உறவினர்ளிடம் உதவியை நாடுவார்கள்.  

மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகள் தான், பூப்பெய்திய ராஜ்நாட் சமூக பெண்களின் பிற்கால வாழ்க்கை. மும்பையில் டான்ஸ் பார்கள் தொடங்கப்படும் வரை இதுதான் நிலை.

கடந்த 2004ம் ஆண்டு, பூப்பெய்திய சங்கீதாவும் பாலியல் தொழிலுக்காக மும்பை போகுமாறு கட்டாயப் படுத்தப் பட்டார். துடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கீதாவின் குடும்பத்தில் பெற்றோர் உள்பட 8 பேர். சங்கீதா உடன் பிறந்ததில் 2 சகோதரர்கள் 3 சகோதரிகள்.

பால்ய வயதிலேயே சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்களால் குடும்பத்துக்கு எந்த வருவாயும் கிடையாது. 

திருமணம் முடித்தாலும் குடும்பத்தை ஓட்டுவதற்கு, பாலியல் தொழிலில் ஈடுபடும் சகோதரிகளை நம்பித்தான் இருப்பார்கள்.

சங்கீதாவுக்கு ஒரே குழப்பம். மும்பையில் டான்ஸ் பாரில் வேலை செய்யும் தனது அத்தை பிங்கியிடம் செல்வதா அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவதா என ஒரே சிந்தனை. 

பிங்கியும் முதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, பின்னர் டான்ஸ் பாருக்கு மாறியவர் தான்.

சங்கீதாவுக்கு பிற நாட் சமூகத்து பெண்களைப் போல பாலியல் தொழிலில் ஈடுபடவும் விருப்பம் இல்லை. வேறு எந்தத் தொழிலும் அவருக்கு தெரியவும் செய்யாது. ஆனாலும் பாலியல் தொழில் மட்டும் வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருந்தார்.

மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள டான்ஸ் பாரில் சங்கீதா வேலைக்குச் சேர்ந்தார். நல்ல வருவாய் கிடைத்தது. 

சம்பளம் தவிர டிப்ஸ்களும் கிடைத்தன. ஒரே வருடத்தில் துடுவில் சொந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டை மாற்றிக் கட்டினார். தனது சகோதரர் களுக்கும் வீடு கட்டிக் கொடுத்தார்.

அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்.துடு கிராமத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வர்களின் வீடுகள் எல்லாம் மண் வீடுகளாகவே இருக்க, டான்ஸ் பாரில் வேலை பார்த்த சங்கீதாவின் வீடு, மார்பிள் பதிக்கப் பட்டு பளபளத்தது.

சங்கீதாவைப் பார்த்து இப்போது நாட் சமூகத்து இளம் பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதில்லை. அந்த தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு ஆடுகிறார்கள்.. பாடுகிறார்கள்.

சங்கீதா இது குறித்து கூறுகையில்,'' டான்ஸ் பார்களுக்குத் தடை விதிக்கப் படுவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பு தான் நான் மும்பை வந்தேன். நானும் என்னோட சகோதரியும் சேர்ந்து டான்ஸ் பாரில் வேலை பார்த்தோம். நல்ல வருமானம் கிடைத்தது.

எங்களோட இளைய சகோதரியை பள்ளிக்கு அனுப்பி விட்டோம். டான்ஸ் பாருக்கு தடை விதிச்சதும் நான் பாலியல் தொழிலுக்கு போய் விட வில்லை. ஊருக்குப் போய் விட்டேன்.

தடை நீக்கப்பட்டதும் இப்போது மீண்டும் வந்துள்ளோம் எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் இனிமேல் பாலியல் தொழிலுக்கு போகக் கூடாது என்பதுதான் என் விருப்பம் '' என்றார்.

மும்பை டான்ஸ் பார்களில் கிடைக்கும் வருவாயால், நாட் சமூக பெண்களின் மனநிலை மாறத் தொடங் கியுள்ளது. கவுரவமாக வேலை பார்ப்பதாக கருதுகின்றனர். திருமண வாழ்க்கையில் ஈடுபடும் எண்ணமும் வந்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும் நாட் சமூகத்தினர் முன்னேறத் தொடங்கி யுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 'வோல்ர்டு விஷன்' நிறுவனம் 7 நாட் சமூகத்து கிராமங்களை சேர்ந்த 171 குடும்பங் களிடம் ஆய்வு நடத்தியது.

அதன்படி, மும்பையில் டான்ஸ் பார்கள் செயல்பட்ட காலத்தில் 76 சதவீத நாட் சமூக மக்கள் குடிசை வீடுகளை சிமெண்ட் வீடுகளாக மாற்றிக் கட்டி யுள்ளனர். 

தொலைக் காட்சிகள் 81 சதவீத வீடுகளில் உள்ளன. 93 சதவீத வீடுகளில் ஷோபாக்களும் 56 சதவீத வீடுகளில் கார்கள்

அல்லது மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. இதுவெல்லாம் மும்பையில் டான்ஸ் பார்கள் செயல்பட்ட போது நாட் சமூக மக்களிடையே நிகழ்ந்த பொருளாதார ரீதியான மாற்றங்கள்.

நாட் சமுகப் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டதில் பிங்கிக்கு முக்கிய பங்கு உண்டு, '' எங்கள் சமூகத்தை மற்ற சமூகத்தினர் ஒதுக்கியேத் தான் வைத்திரு ப்பார்கள்..எங்க வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் வரமாட்டா ர்கள்.

எங்கள் சமூகத்து ஆண்களே தங்கள் சுய நலத்துக்காக எங்களைத் திருமண வாழ்க்கையில் ஈடுபட விட மாட்டார்கள். 

பத்து வயசுலேயே என்னை இந்த தொழிலுக்குத் தள்ளிட்டாங்க. நானே சாலை யோரங்களிலும் தபாக்களிலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டேன்.
சரி... நம்மளால நம்ம குடும்பத்தினர் இரு வேளையாவது சாப்பிடு கிறார்களே என்ற ஒரே மனநிறைவு மட்டும் தான் எனக்குள் இருந்தது. பின்னர் டான்ஸ்பாரில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

மும்பையில் டான்ஸ் பாரில் குறைந்தது ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எனது தோழி ஒருவர் பாலியல் தொழிலில் தான் ஈடுபட்டிருந்தார். டான்ஸ் பாரில் என்னுடன் அவரும் வேலைக்கு சேர்ந்தார். நல்ல வருவாய் கிடைத்தது.

நிம்மதியாக காலத்தை கடத்தினார். டான்ஸ் பார் மூடப்பட்டது. சொந்த கிராமமான ராஜஸ்தானில் உள்ள நன்ட்லாபுராவுக்கு சென்று விட்டார். 

வேறு தொழிலும் தெரியாது. இப்போது அங்கும் பாலியல் தொழிலில் தான் ஈடுபடுகிறார். தினமம் 150 ரூபாய் கிடைக்கிறது என்றார் .

ஒரு மகனும் உண்டு. மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிலேயே பாலியல் தொழிலில் ஈடுடுகிறார். எங்கே மகனுக்குத் தெரிந்து விடுமோ என தினமும் பயப்படுகிறார். 

மானத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு டான்ஸ் பார்கள் ஒருவகையில் உதவியாக இருந்தன.

அதனை மும்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் தொழில் தொலைத்து விடும் ''என்கிறார் பிங்கி.
Tags:
Privacy and cookie settings