நடிகை விந்தியா… திடீர் என்றுதான் அரசியலுக்கு வந்தார். அதற்கு முன் அவருக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது…! ஒரு நாள் அபோதைய முதல்வர் ஜெ.வை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருக்கு மேடையில் பேசும் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரு திரை நட்சத்திரம் என்ற அளவில் தான் அந்த வாய்ப்பும் கொடுக்கப் பட்டது. ஆனால், அந்த முதல் மீட்டிங்கில் மிரட்டி விட்டார் விந்தியா.
ஆடிப் போனார்கள் நிர்வாகிகள். கலைஞரை புரட்டிப் புரட்டி எடுத்தார். தளபதியை வறுத்து எடுத்தார். யாரையும் விட்டு வைக்க வில்லை..!
மிரண்டு போன உளவுத்துறை உடனடியாக ஜெ.விற்கு ஆடியோவும், செய்தியும் அனுப்பினார்கள். ஜெ. வியந்து போனார். தலைமைக் கழக பேச்சாளர் ஆனார் விந்தியா. நிறைய படித்தார்.
நூறு வருட இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்தார். சட்டமன்ற தேர்தல் போது தமிழகத்தின் மூலை முடுகெல்லாம் பம்பரமாகச் சுற்றினார். விந்தியாவிற்கு பதில் சொல்லவே திமுக தண்ணி குடித்தது.
விந்திய கேட்கும் கேள்விகளுக்கு கலைஞர் பதில் கொடுக்க வேண்டிய நெருக்கடி. அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெ. முதல்வர் ஆனார். விந்தியாவை கார்டனுக்கு அழைத்தார்.
கட்டி அணைத்து பாராட்டினார் ஜெ..! கதறி அழுது விட்டார் விந்தியா…! இன்னும் வேகம் பிடித்தார்..!! பாராளுமன்ற தேர்தல் வந்தது. கேப்டன் அணி மாறினார்.
முடிந்தது கதை.. கழுவிக் கழுவி ஊற்றினார்..கேக்கலி கொட்டினார்…வெளுத்து வாங்கினார்.. அண்ணி பிரேமலதாவிற்கு விந்தியாவை தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இப்படி ஜெ.வின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த விந்தியா ஜெ. வின் மரணத்தில் சுக்கு நூறாக உடைந்தே போனார்..! ஒரு வாரம் அழுது தீர்த்தார். யாருமே தேற்ற முடியவில்லை..! ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தார் என்கிறார்கள்.
அம்மாவை மட்டுமே புகழ்ந்த வாயால், சின்ன அம்மவை எல்லாம் புகழ்வதா..?அது நடக்காது. இரு முடிவு எடுத்தார். இரண்டு முடிவு எடுத்துள் ளாராம். ஒன்று அரசியலில் இருந்து விலகுவது. இரண்டாவது ஜெயலலிதா குறித்து புத்தகம் எழுதுவது.
விசுவாசம்… அதையும் மீறியது…தாய்ப் பாசம்..!