உலகிலேயே பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலை தான் மிகவும் மோசமாகவும், பராமரிப்பு இல்லாமலும் காணப்படு வதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை பொருள் கடத்தல் குற்றங்கள் அதிகளவு நடப்பதாகவும், அதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்திர விட்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் போதை பொருள் கடத்திய வர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப் பட்டதாக கூறப் படுகிறது.
போதை பொருள் கடத்தல் குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்ற நடவடிக்கை களில் ஈடுப்பட்ட வர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள கொய்ஸான் என்ற நகரத்தில் உள்ள சிறைச் சாலையில் ஒரு அறையில் 30 கைதிகள் மட்டுமே
தங்கும் வசதியும் மொத்தம் உள்ள அறைகளில் 800 கைதிகள் மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்றும் கூறப் படுகிறது.
ஆனால் தற்போது ஒரு அறையில் 130 கைதிகளுக்கு மேல் அடைக்கப் படுவதாகவும், 3 ஆயிரத்திற்கு அதிகமான கைதிகள் இங்கு அடைக்கப் பட்டிருப்ப தாகவும் கூறப் படுகிறது.
இரவில் தூங்கும் போது கைதிகள் கால்களை நீட்டி படுக்க முடியாது. சில நேரங்களில் ஒருவருக்கு மேல் ஒருவராகவும்,
படிக்கட்டுகளிலும் படுத்திருப் பதாகவும், பராமரிப்பு இல்லாமல் நரகம் போல காட்சி யளிப்பதாக கூறப் படுகிறது.
Thanks for Your Comments