மத்திய அரசு மீது ராமமோகன ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு !

தன் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைகள் குறித்து, தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், 
மத்திய அரசு மீது ராமமோகன ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு !
மத்திய அரசு மற்றும் வருமானவரித்துறை மீது சில பரபரப்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். 

இன்று ( செவ்வாய்க்கிழமை) தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், 

மாநில தலைமைச் செயலகத்தில் யாருடைய அனுமதியை பெற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று கேள்வி எழுப்பினார்.

ராம மோகன ராவ் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், என் வீட்டிற்கு சோதனை செய்ய வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழங்கிய தேடல் ஆணையில், என் பெயர் இல்லை. 

என் வீட்டில் 1, 12, 320 ரூபாய் மட்டுமே உள்ளது. இதனை தான் அவர்கள் கண்டெடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

என்னை வீட்டுக்காவலில் வைத்தது சட்ட விரோதமானது
மேலும், ராம மோகன ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாநிலத்தின் தலைமை செயலாளரை வீட்டுக் காவலில் வைத்து இருந்தது தவறு. இது சட்டத்திற்கு விரோதமானது' என்று குற்றம்சாட்டினார்.

''மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கே இந்த நிலை என்றால், அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது'' என்று ராம மோகன ராவ் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நான் தான்

நான் இன்னமும் தமிழக தலைமைச் செயலாளராக உள்ளேன் என்று தெரிவித்த ராம் மோகன் ராவ், வரும் நாட்களில் தமிழக மக்கள் பலர் தன்னை சந்திப்பார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன் நான் என்று குறிப்பிட்ட ராம் மோகன ராவ், 

ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்தால் தமிழக தலைமைச் செயலகத்தில் இவ்வாறு வருமான வரித்துறை சோதனை நடந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று ராம மோகன ராவ் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

சேகர் ரெட்டி யாரென்றே தெரியாது

தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டியை, சிபிஐ எனப்படும் 

மத்தியப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது குறித்து குறிப்பிட்ட ராம மோகன ராவ் ''சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை.

எனக்கு சேகர் ரெட்டி என்றால் யாரென்றே தெரியாது. அவர் ஒரு பொதுப்பணி ஒப்பந்தக்காரர் என்று தெரிய வருகிறது 

என்று தெரிவித்த ராம மோகன ராவ், அவருடன் எனக்கு எவ்வாறு தொடர்பு இருக்க முடியும் என்று வினா எழுப்பினார்.
முன்னதாக, டிசம்பர் 21-ஆம் தேதியன்று தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தமிழக தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர், டிசம்பர் 24-ஆம் தேதியன்று ராம மோகன ராவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
Tags:
Privacy and cookie settings