சென்னையில் உள்ள காவிரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை அம்மருத்துவ மனை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்துடன், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவருக்குத் தரப்பட வேண்டிய ஆண்டி பயோடிக் மருந்துகள் தரப்பட்டு முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என்றும், அவர் சிறப்பாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட் டுள்ளது.
இந்நிலையில், அவர் வரும் வெள்ளிக் கிழமையன்று, அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியன்று வீடு திரும்புவார் என மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்