சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், மத்திய அரசுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில்,
உச்சநீதி மன்றம் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்கு, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஹைகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைகள் சட்டத்தில், திருத்தம் செய்து, நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான மசோதா நிறை வேற்றப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு, தற்போது, பிடித்தங்கள் போக, மாதம், 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments