அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதால் காலமானார்.
அவரது உடல் அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது போயஸ் தோட்ட இல்ல வாசலுக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குடும்பத்தினரை அனுமதிக்க வில்லை. இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள்
ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.
ஜெயலலிதாவின் குடும்ப முறைப்படி போயஸ் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.
அரசு மரியாதை செய்யப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது. ஏராளமான பொது மக்கள், அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் அருகே அவரது ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்க வில்லை.
சசிகலா, இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், இளவரசியின் மகன் விவேக், மருமகள், இளவரசி மருமகன் ராஜராஜன், டாக்டர் சிவகுமார்
அவரது மனைவி பிரபாவதி, பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் தான் சுற்றி நின்று கொண்டிருக் கின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சிறிது நேரத்தில் சேர் போட்டு அமர்ந்தனர்.
முதல்வர் ஓ.பி.எஸ், தம்பித்துரை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கவலை தேய்ந்த முகங்களுடன்
கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் கால்மாட்டில் ராஜாஜி ஹால் படியில் ஸ்டூல் போட்டு கீழே அமர்ந்து கொண்டு இருக்கின்றனர்.