சவுதி அரேபியாவில் ஆண்கள், பெண்களை அதிகப்படியான கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியு றுத்திய நபருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
ஆண்கள் பாதுகாவலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்த தாகவும், கிழக்கு பகுதி நகரான டமாமில்
எதிர்ப்பு பதாகைகளை வைத்ததாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
குடும்பத்தினரால் தவறாக நடத்தப்படும் தனது உறவுக்கார பெண்களுக்கு உதவ, ஆண்கள் பாதுகாவலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியதாக அந்த மனிதர் தெரிவித் துள்ளார்.
முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆண்களால் பாதுகாக்கப்படும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என
ஆயிரக் கணக்கான சவுதி மக்கள் விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்தி ட்டிருந்தனர்.
Thanks for Your Comments