சென்னையில் நாய்கறி பிரியாணி விற்கப்படுவதாக சமூக வலை தளங்களில் வரும் புகைப் படங்களால் அசைவப் பிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னையில் சில நடைபாதை கடைகளில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்யப் படுகிறது. இதற்காக பூனைகள் கொல்லப் பட்டு, பூனை பிரியாணி விற்பனை செய்யப் படுகிறது
என்று “நியூஸ் பாஸ்ட்” இணைய தளம் கடந்த அக்டோபர் மாதம் படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள் புகார் செய்ததை யடுத்து, சிலர் கைது செய்யப் பட்டனர்.
ஏற்கனவே கோழிபிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி வழங்கப் படுவதும், செய்திகளாக நாளேடுகளில் வந்தன. இதனால், நடைபாதை கடைகளிலும், ஒரு சில பிரியாணி கடைகளிலும் பிரியாணி சாப்பிட அசைவம் சாப்பிடுவோர் அஞ்சினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாய்கள் கறிக்காக கொல்லப்படும் புகைப் படங்கள் வெளியாகி யுள்ளன. ஒருநபர் நாயை கழுத்தை அறுத்தும், அதை ஆட்டுத்தோல் உரிப்பது போல் உரித்து வைத்தும், அதை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்தும் இருப்பதுபோல் புகைப்படங்கள் வெளியாகி,
சமூக வலை தளங்களில் வலம் வருகின்றன. இந்த நாய்கறி சென்னையில் சில கடைகளுக்கு இந்த கறிகள் சப்ளை செய்யப் படுவதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இது குறித்து விசாரித்த போது, பெங்களூரில் சிலர் இறைச்சிக்காக நாய்களைக் கொன்றதும், அது தொடர்பாகச சிலர் கைது செய்யப் பட்டதும் தெரிய வந்தது.
ஆனால், இந்த புகைப் படம் வெளியானதில் இருந்து, சென்னையிலும் நாய்கறி பிரியாணி சப்ளை செய்யப் படுவது உண்மையோ என அசைவ பிரியர்கள் சந்தேகிக் கின்றனர்.
இது குறித்து பி.எப்.சி.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஒருநபரிடம் கூறுகையில், சமீபத்தில் கேரளாவில் இதுபோல் நாய்கள் கறிக்காக கொல்லப் படும் சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் இதுபோல் நடக்கிறதா என்பது குறி்த்து விசாரிக்கிறோம் என்றார்.