பொதுக்குழுவை புறக்கணித்த சசிகலா !

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, ஜெயலலிதாவின் தோழி சசிசலா புறக்கணித்துள்ளார். தொண்டர்கைள் எதிர்ப்பு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
பொதுக்குழுவை புறக்கணித்த சசிகலா !
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த பொதுச்செயலாளர் என கூறப்படும் சசிகலா பங்கேற்வில்லை. 

தொண்டர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு காரணமாக அவர் பங்கேற்க வில்லை என கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இன்று முதல் முறையாக அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 
ஆனால் அடுத்த பொதுச் செயலாளர் என கூறப்படும் சசிகலா இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். 

தொண்டர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு காரணமாக அவர் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings