சசிகலா நடராஜனுக்கு எதிராக சசிகலா புஷ்பா திடீரென வழக்கு தொடர்ந்ததன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி யுள்ளன.
ஜெயலலிதா மரண மடைந்ததை தொடர்ந்து அவரது நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளராக முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென வழக்குப் போட்டுள்ளார் சசிகலா புஷ்பா.
இது அவரது முடிவு இல்லையாம். டெல்லி பாஜக மேலிடத்தின் ஆலோசனை படி தான் அவர் திடீரென வழக்கு போட்டுள்ளாராம்.
சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர் வழக்கு போடலாம் என காத்திருந்தாராம்.
ஆனால் இதற்கிடையில் டெல்லி பாஜக மேலிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அவரிடம் பேசிய டெல்லி பாஜக மேலிடத் தலைவர், சசிகலா பொதுச் செயலராக தேர்வு செய்யப் பட்டால் அது தேர்தல் ஆணையத் துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் நீங்கள் வழக்கு போட்டால் இடைப்பட்ட உத்தரவு காலத்தில் தேர்தல் ஆணையமும் சசிகலாவை பொதுச் செயலராக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு ள்ளதாக கூறினாராம்.
இதனால் இப்போதே வழக்குப் போட்டுவிடுங்கள் என்று கூறினாராம். இந்த ஆலோச னையின் பேரில் தான் உடனே சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கு போட்டாராம் சசிகலா புஷ்பா.