அண்ணா காலத்து அரசியல்வாதி என்ற பெருமைக்குரிய 79 வயதாகும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அரசியல் மேடை எதுவும் இதுவரை ஏறாத சசிகலா தலைமையை ஏற்றுள்ளார்.
அண்ணா காலத்தில் திமுகவுக்கு வந்தவர் பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன்.
1967-ம் ஆண்டு திமுக முதலில் ஆட்சி அமைத்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
அண்ணா ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீட்டுக் குழு தலைவராக அவர் நியமிக்கப் பட்டார்.
பின்னர் 1971-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் பண்ருட்டியார்.
பின்னர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
ஐநாவில்...
தமிழீழத் தமிழர் பிரச்சனையை ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளுக்கு விளக்க எம்.ஜிஆரால் 1983-ம் ஆண்டு அனுப்பி வைக்கப் பட்டவர் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன்.
70 நாட்கள் ஐநா சபையில் ஈழத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் பிரச்சனையை சர்வதேச நாட்டு பிரதி நிதிகளுக்கு விளக்கியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஊர்வலமாக அழைத்து வந்த எம்ஜிஆர்
இதன் பின்னரே தமிழீழத் தமிழர் பிரச்சனை விஸ்வ ரூபமெடுத்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் முயற்சிக்கு பின்னர்தான் சர்வதேச நாடுகள் ஐநா சபையில் இலங்கையை அப்போது கண்டித்தது.
பண்ருட்டி ராமச்சந்திரனை பாராட்டும் வகையில் சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.