சீக்கிய பாரம்பரிய முறையில் நடைபெற்ற இத் திருமண வைபவத்தில் பஞ்சாபி கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆடை அலங்காரங் களுடன் பங்குபற்றினார் சன்னி லியோன்.
சீக்கிய பெற்றோரின் மகளாக கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரின் உண்மையான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இவரின் இளைய சகோதரரான சந்தீப் வோரா சமையல் கலை நிபுணர்.
தமது பெற்றோர் காலமாகிவிட்டநிலையில், தனது சகோதரருடன் மிகவும் பாசமாகப் பழகுபவர் சன்னி லியோன் அமெரிக்காவில் வசிக்கும் சந்தீப் வோராவின் திருமண வைபவம் கலிபோர்னியா நகரில் அண்மையில் நடைபெற்றது.
இத்திருமண வைபவத்துக்காக சன்னி லியோன், அவரின் கணவர் டேனியர் வெபர் ஆகியோர் மும்பையிலிருந்து கலிபோர்னியாவுக்குச் சென்றிருந்தனர்.
இக் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவ் வைபவத்தில் பங்குபற்றினர். இத்திருமண வைபவத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்.
‘எனது சகோதரருக்கும் அவரின் மணமகளுக்குமான மகிழ்ச்சியை தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. எனது பெற்றோர்களை இவர்களுக்காக மீளக் கொண்டுவர என்னால் முடியாது.
ஆனால், அவர்களுக்குத் துணையாக நான் இருக்க முடியும். இப்போது எமது குடும்பப் பெயரான வோராவை முன்னோக்கி கொண்டு செல்வது எனது சகோதரர் சந்தீப்பின் பொறுப்பாகும்.
அதை அவர் மிக இலகுவாக செய்வார் என்பதை நான் அறிவவேன்’ என சன்னி லியோன் தெரிவித்துள்ளார். சன்னி லியோனின் தந்தை திபெத்தில் பிறந்து டில்லியில் வளர்ந்தவர்.
தூயார் இமாலாயப் பிரதேசத்தை சேர்ந்தவர். சன்னி லியோன் 1981 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தார்.
50 இற்கு மேற்பட்ட ஆபாசப்படங்களில் அவர் நடித்த பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக அறிமுகமானார். தற்போது பொலிவூட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக அவர் விளங்குகிறார்.