தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. இதனால் அப்போலோ மருத்துவ மனையில் அசாதாரண சூழல் உருவாகி யுள்ளது.
இந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அப்போலோ நிர்வாகம் அதன் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு களை வழங்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கும் போதே மற்ற நோயாளி களும் மருத்துவ மனைக்கு வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
இதனால் மற்ற நோயாளி களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலை யில், நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனை யடுத்து அப்போலோ மருத்துவமனை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், அப்போலோ மருத்துவமனைக்கு வெளியில் ஆயிரக்கண க்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதனால் மற்ற நோயாளிகள் மருத்துவ மனைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்போலோ மருத்துவ மனைக்குள் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ள முடியாத நோயாளி களை, சென்னையில் இதர இடங்களில் உள்ள
அப்போலோ மருத்துவ மனைக்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கும் படி அதன் ஊழியர் களுக்கு அப்போலோ நிர்வாகம் வாய்மொழியாக உத்தர விட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன.