இனி கைரேகை, கண் விழி மூலம் பணப்பரிவர்த்தனை !

0
ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப் பரிமாற்றத் திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு களை பயன்படுத்தி மக்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி கைரேகை, கண் விழி மூலம் பணப்பரிவர்த்தனை !
இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப் பரிவர்த்த னையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதில், பின் நம்பர், பாஸ்வேர்டு இல்லாமல் அவர்களின் ஆதார் எண்ணுடன் சம்பந்தப்பட்ட பயோமெட்ரிக் முறையிலான கைரேகையை பதிவு செய்து 

பணப் பரிமாற்ற முறையை செயல் படுத்தவும், இதற்காக பொதுவான மொபைல் ஆப் ஒன்றை உருவாக்க திட்ட மிட்டுள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே கூறுகையில்,ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை 1.31 கோடி ரூபாய் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் எண்ணிக்கையை நாள்தோறும் 40 கோடியாக அதிகரிக்க திட்ட மிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும், பணமற்ற பணப் பரிவர்த் தனையை ஊக்குவிக்க உதவும் வகையில் கைரேகை 
அல்லது கண் விழியை அடையாளம் காணக்கூடிய மொபைல் போன்களை உருவாக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings