அமுர் என அழைக்கப்படும் இப்புலிக்கு உணவாக உயிருள்ள ஆடு ஒன்றை ஊழியர்கள் அனுப்பினர். இந்த ஆட்டை இப்புலி வழக்கம் போல வேட்டையாடி உட்கொள்ளும் என ஊழியர்கள் கருதினர்.
ஆனால், அந்த ஆட்டை கொல்வதற்குப் பதிலாக அதனுடன் நட்பாக பழக ஆரம்பித்தது புலி.“ஆடுகளையும் முயல்களையும் எப்படி வேட்டையாடுவது என்பதை இப்புலி நன்றாக அறிந்துள்ளது.
ஆனால், இந்த ஆட்டை வேட்டையா டுவதற்கு இப்புலி மறுக்கிறது. தைமூர் என பெயரிடப்பட்ட இந்த ஆடும் புலியும் நண்பர்களாக விளங்குகின்றமை எமக்கு பெரும் வியப் பளிக்கிறது” என இம்மிருகக்காட்சி சாலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்புலியும் ஆடும் நட்புடன் பழகுகின்றபோதிலும், ஆட்டின் பாதுகாப்பு கருதி அதை புலியிட மிருந்து பிரிக்க வேண்டும் என மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
ஆனால், ஆட்டை பாதுகாக்கும் வகையில் புலி செயற் படுவதால் இவ்விரு மிருகங் களையும் பிரிப்பது கடினமானது என மேற்படி ஊழியர் தெரிவி த்துள்ளார்.
Thanks for Your Comments