நம் அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சேகரிக்கிறோம் என்றால் அதற்கு தகவல்களை இணைய தளத்தில் தேடுவது மிக எளிது.
ஆனால் அறிவியல் சம்பந்தப் பட்ட பல குறீயிடுகளை தேடி அதை கட்டுரையில் குறியிடுவது மிக கடினமான விஷயம் தான்.
அதற்காக புதிய இணைய தளம் அறிமுகப் படுத்த பட்டுள்ளது. அறிவியல் கட்டுரை களை உருவாக்கும் போது
சில சிறப்பு எழுத்துக்கள் அல்லது கிரேக்க குறியீடுகளான €, £, λ,Σ போன்ற வற்றை பயன்படுத்த வேண்டிவரும்.
அந்த சூழ்நிலையில் ‘@’ மற்றும் ‘&’ போன்ற எழுத்துகளை கீ போர்டிலிருந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் ρ, η, ζ, ϑ, √, Φ போன்ற எழுத்துகளை பெற இயலாது.
அறிவியல் குறியீடுகளை பயன்படுத்த ‘மவுஸர்’ (http://www.mausr.com) எனும் இணைய தளம் பயன் பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இணைய தளத்தில் குறியீடுகளை எளிதாகத் தேடலாம்.
தேடுவது மிக எளிமை. அந்த இணைய தளத்தில் இடப்புறம் உள்ள சிறு அட்டவணையில் நம் தேடும் குறியீடுகளை வரைந்து காட்டினாலே அதற்குப் பொருத்தமான குறியீட்டை இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது.
அதற்கான விளக்கமும் தரப்பட் டுள்ளது. குறியீட்டை நகலெடுத்துப் நம்மால் பயன்படுத்த இயலும்.