இந்தியாவில், செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டெபாசிட் செய்வதற்கு இன்று தான் கடைசி நாள்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக் கையாக, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோதி அறிவித்தார். இந்த நடவடிக்கை குறித்து, மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அதே நேரத்தில், அதை அமல்படுத்திய விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்,
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், பழைய நோட்டுக்களை வைத்திருப்பதை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டம் இயற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
பதற்றத்தை ஏற்படுத்திய அறிவிப்பு
செல்லாது என அறிவிக்கப் பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம், மொத்த இந்திய கரன்ஸியில் 86 சதம் என்பது குறிப்பிடத்த க்கது.
அறிவிப்பு வெளியானதும், வங்கிகள் மற்றும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகளை நாடு முழுவதும் காண முடிந்தது.
மேலும், பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் பல கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டன. புதிய புதிய உத்தரவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
எனினும், ரொக்கமற்ற வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அனைவரும் மாற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனால், கடைகளிலும், இணைய த்திலும் ரொக்கமற்ற வர்த்தகப் பரிவர்த்தனை அதிகரித்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அரசின் நடவடிக்கையால், வங்கிளுக்கு பெருமளவு பணம் வந்திருப்பதாகவும், வரி வருவாயும் பல மடங்கு அதிகரித்திருப் பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அரசின் நடவடி க்கையால், ஊழல் ஒழியவில்லை, கறுப்புப் பணம் வெளியே வரவில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், வேகமாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம், தற்போது தேக்கமடை ந்துள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு விரைவில் உரையாற் றுவார் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அடுத்தது என்ன என்று ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டி ருக்கிறது.
Thanks for Your Comments