பொருளாளராகிறார் பண்ருட்டி மாஸ்டர் பிளான் | Treasurer panrutti Master Plan !

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் உட்கார்ந்து
பொதுச்செயலரை பதவி ஏற்கும் கையோடு கட்சியில் மாற்றங்களை கொண்டு வருகிறாராம். இதற்கான ஆலோசனைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்கும் கையோடு தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள்; அதிருப்தி சமூகத் தலைவர்கள் என பலருக்கும் பதவிகள் தரப்பட உள்ளதாம். முதல்வர் பதவியில் இருக்கும் பன்னீர்செல்வம், அதிமுக பொருளாளர் பதவி தனக்கு வேண்டாம் என சொல்லி வருகிறாராம்.

பொருளாளர் பதவி

இதனால் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்படுகிறது. ஜாதிக்கு ஒரு துணைப் பொதுச்செயலர் பதவி என செங்கோட்டையன், கேபி முனுசாமி உள்ளிட்ட பலருக்கும் பதவிகள் கிடைக்கப் போகிறது.

அடிதடி

அதேபோல் அதிமுக கட்சி அமைப்புகளிலும் தங்களது குடும்பத்தினர் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி மும்முரமாக இருக்கிறது. சசிகலா பொதுச்செயலராகவில்லை என்றால் எனக்குதான் அந்த பதவி என அடித்துக் கொண்டவர்கள் மன்னார்குடி கோஷ்டி.

சின்னம்மா குடும்பம்

சசிகலா பொதுச்செயலரானால் எங்களுக்கும் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கியது 'சின்ன சின்னம்மா' குடும்பம். இவர்களுக்கு அதிமுக என்ற கட்சி மீதான விசுவாசம் என்பதை

கலைக்கப்படாத ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டும்; அதிகார மையமாக இருக்க வேண்டும் என்ற பேரவாதான் இந்த முட்டல்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மா.செ.க்கள்

அமைப்புகளைத் தொடர்ந்து மாவட்ட செயலர் பதவிகளிலும் மாற்றம் இருக்கும் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அதன் பின்னர் தொண்டர்களை சந்திக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாம்.
Tags:
Privacy and cookie settings