திருமணத்தில் மணமகனை கொலை செய்ய முயன்ற ஜோடி !

0
மேற்கு வங்க மாநிலம் புர்துவான் மாவட்டத்தில் உள்ள கல்னா என்ற இடத்தை சேர்ந்தவர் தீபா. இவரும் அதே பகுதியை சேர்ந்தவர் ஜிரஞ்சித் பால் என்பரும் காதலித்து வந்தனர். 
திருமணத்தில் மணமகனை கொலை செய்ய முயன்ற ஜோடி !
இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப் பட்டு இருந்தது.அதே சமயத்தில், தீபாவுக்கு ஓரின சேர்க்கை பழக்கமும் இருந்தது. 

இவரது நெருங்கிய தோழியாக இருந்தவர் நசீமா என்பவருடன் தீபா இந்த பழக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தீபா ஜிரஞ்சித்தை திருமணம் செய்வது நசீமாவுக்கு பிடிக்க வில்லை என்பதால் இது குறித்து தீபாவிடம் பேசினார். இருவரும் ஜிரஞ்சித் பாலை கொலை செய்து விடுவது என்று முடிவு செய்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் தீபா ஜிரஞ்சித்பாலை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். 
இதனை தொடர்ந்து அங்கு சென்ற அவரை, ஏற்கனவே தயாராக இருந்த நசீமா, மிக ஆவேசமாக பாய்ந்து சென்று கத்தியால் குத்த முயன்றார்.

சுதாரித்து கொண்ட அவர் அந்த கத்தியை தட்டி விட, அது கீழே விழுந்தது. ஆனால், தீபா அந்த கத்தியை எடுத்து ஜிரஞ்சித் பாலை குத்தினார்.

உடனே ஜிரஞ்சித் பால் அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்தார். உடனடியாக, விரைந்து சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

நசீமாவுக்கும், தீபாவுக்கும் இடையே ஓரின சேர்க்கை இருப்பதை தீபாவின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர். 
இதை பல முறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று போலீசாரிடம் கூறினர். தொடர்ந்து இதுபற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings