வர்தா புயல் இன்னும் அகற்றப்படாத குப்பைகள் !

1 minute read
சென்னையில் வர்தா புயல் ஒரு பிரளய த்தையே ஏற்படுத்தி விட்டு சென்று விட்டது. வர்தா புயலால் வேரோடு விழுந்த மரங்கள், மின் கம்பங்கள் எண்ணிலடங் காதவை. 
வர்தா புயல் இன்னும் அகற்றப்படாத குப்பைகள் !
மேலும் ஒரு வாரமாகியும் இன்னும் பல பகுதியில் மின் வினியோகம் சரி செய்யப்பட வில்லை. இவை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் புயல் காரணமாக சென்னை முழுவதும் குப்பைமய மாகி உள்ளது. ஒரு வாரம் ஆகியும் இந்த குப்பைகள் இன்னும் அகற்றப்பட வில்லை. ஆங்காங்கே தேங்கி உள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. 

இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக பொதுமக்கள் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் இந்த தேங்கிய குப்பைகளால் புதிய நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு திமுக உள்பட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மனு அளித்து உள்ளனர். ஆனால் மாநகராட்சி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே உடனே மாநகராட்சி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings