சிலர் மத்தியில் மட்டும் தான் காதுக்கு அருகே இது போன்ற சிறிய ஓட்டை உண்டாகி இருப்பதை நாம் காண முடியும். இது காதின் குருத்தெலும்பு முகத்தினோடு சேரும் பகுதியில் அமைந்திருக்கும்.
சதவிகிதம்!
காதருகே அமைந்திருக்கும் சிறிய ஓட்டை போன்ற இது அமெரிக்க மக்கள் தொகையில் 0.1 சதவீதமும், ஐரோப்பிய மக்கள் தொகையில் 0.9 சதவீதமும்,
ஆசியா மற்றும் ஆப்ரிக்க மக்கள் தொகையில் 4 - 10 சதவீதமும், தென்கொரிய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேரிடம் காணப்படுகிறது.
இந்த சிறிய ஓட்டை என்ன?
இது ஒரு பிறவி சார்ந்த குறைபாடாக பார்க்கப்படுகிறது. இதை ப்ரியாரிகுலர் சைனஸ் என கூறுகின்றனர்.
இதனால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது. இது முதல் மற்றும் இரண்டாம் அடி தொண்டை வளைவு சார்ந்து ஏற்படுகிறது என கூறப் படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ.யின் மாட்டுப் பண்ணை !
பரம்பரை!
காதருகே தோன்றும் இந்த சிறிய ஓட்டை ஆனது, பரம்பரை தொற்றாக கூட பின் தொடந்து சிலருக்கு உண்டாகலாம் என அமெரிக்க ஆய்வில் கூறப் பட்டுள்ளது.
முதுகெலும்பு உயிரினங்கள்!
இந்த வடிவம் முதுகெலும்பு உள்ள எல்லா உயிரினங்கள் மத்தியிலும் காணப் படுகிறது. இது கரு வளர்ச்சியின் போது உண்டாகிறது என்றும் கூறப் படுகிறது.
மற்ற உயரினங்கள்...
இது போன்றவை பாலூட்டிகள் மற்றும் மீன் வகை உயிரினங்கள் மத்தியிலும் காணப் படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பரிணாம வளர்ச்சி!
காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியில் நாம் பலவற்றை இழந்துள்ளோம். தண்டுவட எலும்பு வால்ப்பகுதி, குடல் முளை போன்றவை குறிப்பிடத் தக்கவை.
நிழல் நிறம் கருப்பு ஏன்?
அது போன்று இதுவும் ஒன்றாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினும், இதுவரை காதருகே சிலர் மத்தியில் காணப்படும்
இந்த ஓட்டை பற்றி பெரிதாக எந்தவொரு அறிவியல் பரிசோதனை களும் செய்ய வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.