ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலில் செலுத்த லட்சக் கணக்கான பொது மக்களும், பிரபலங்களும் அலை, அலையாக திரண்டனர்.
கூட்டம் நேரம் செல்ல, செல்ல அலை மோதவே..பெரிய பிரபலங்கள் கூட அஞ்சலி செய்ய இயலாமல் போனது.
கூட்டம் காரணமாக… வடிவேலு வந்தும் அஞ்சலி செலுத்த முடியவில்லை. நீயா நானா கோபி லத்தி சார்ஜ்ஜிலேயே மாட்டினார். இந்த வரிசையில் த்ரிஷாவும் மாட்டிக் கொண்டாராம்.
அவரே அதை தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த… கூட்ட நெரிசலால் அருகே செல்ல முடிய வில்லையாம். .
த்ரிஷா ட்விட்டரில், அஞ்சலி செலுத்த பக்கத்தில் போக முடியாததால் கனத்த இதயத்துடன் திரும்பி விட்டேன்.
சென்னையை இது போன்று நான் பார்த்தது இல்லை. இனி சென்னை யம் முன்பு போல் இருக்காது என பதி விட்டு உள்ளார்.