நாம் ஏன் வாகனங்களை இடது பக்கம் செலுத்துகிறோம் !

சாலைகளில் இடது மற்றும் வலது என வாகனங்கள் செல்வதற்கான நடைமுறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடதுபுறமாக வாகனங்கள் செல்லும் நடைமுறை பின்பற்றப்படும் 


நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் சாலையின் வலதுபுறத்தில் செல்லும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

இந்த நடைமுறை எவ்வாறு ஏற்பட்டது? இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்தபோது பல சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. அந்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் சாலையின் இடதுபக்கத்தை பயன்படுத்தும் நடைமுறையை கொண்டிருக் கின்றன என்ற எளிதான பதிலை அளித்துவிட முடியும்.

ஆனால், அந்த வழக்கம் எவ்வாறு வந்தது என்பது குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

உலகின் 65 சதவீத நாடுகள் சாலையின் வலது பக்கத்தை பயன்படுத்தும் நடைமுறையை வழக்கமாக கொண்டுள்ளன. அந்த வழக்கத்தை அறிந்து கொள்வதற்கு வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகின் மிகமோசமான வன்முறை நிறைந்த காலக்கட்டமாக பார்க்கப்படும் இடைக்கால வரலாற்றில் குதிரைகளில் செல்வோர் இடது பக்கத்தை பயன்படுத்தி உள்ளனர். 

அதற்கான முக்கிய காரணம், சட்டம் ஒழுங்கு மிக மோசமான அந்த காலத்தில் சாலையில் எதிர் திசையில் வரும் எதிரிகள் தாக்கும் அபாயம் இருந்தது.


அப்போது இடுப்பில் சொருகியிருக்கும் வாள் மற்றும் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களை வலது கை மூலமாக பயன்படுத்தி எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக இடது பக்கமாக செல்லும் வழக்கத்தை கொண்டிருந்த னராம். 

மற்றொரு காரணம், எதிரில் வருபவர்களுக்கு கைகுலுக்குவ தற்காக என்றும் கூறப்படு கிறது. அந்த காலத்திலேயே போப் ஆண்டவர் சாலையில் இடது புறமாக பயன்படுத்தும் வழக்கத்தை மேற்கொள்ளு மாறு ஒரு அறிவிப்பை வெளியிட்ட தாகவும் தகவல் உண்டு. 

உலகின் 75 சதவீத மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால், சாலையில் இடதுபுறமாக பயன்படுத்துவதும் அதிகரித்தது.

1789-99 இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரெஞ்சு புரட்சி வெடித்து, அந்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பல்வேறு சீர்த்திருந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.

அப்போது, அரசாட்சி மற்றும் திருச்சபை அதிகார முறைமைக ளின்படி இருந்த இடதுபக்க பயன்பாட்டிற்கு எதிராக சாலையில் வலது பக்க பயன்பாட்டு முறை வழக்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. 


மேலும், நெப்போலியன் பிடித்த ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வலதுபக்க நடைமுறை பயன்பாட்டுக்கு புகுத்தப்பட்டது. அடுத்து, அமெரிக்க கண்டத்தில் வலது பக்கம் பயன்பாட்டு முறைக்கான வரலாற்றுத் தகவல்களும் சுவாரஸ்யம் மிகுந்ததாக உள்ளது.

அங்கு விவசாய பொருட்களை குதிரைகள் பூட்டிய பெரிய வண்டிகளில் ஏற்றிச் செல்வது வழக்கம். அந்த வண்டிகளில் குதிரைகளை கட்டுப்படுத்தி ஓட்டிச் செல்பவருக்கான இடவசதி இல்லை. இதனால், இடதுபக்கம் பூட்டப்பட்டிருக்கும் குதிரையில் வண்டி ஓட்டுபவர் ஏறி அமர்ந்து கொள்வாராம்.

அத்துடன், பள்ளம் மேடான சாலைகளில் வண்டி செல்லும்போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக, வண்டியை வலது பக்கத்தில் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனராம். அதுவே மோட்டார் வாகனங்களுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் குதிரை வண்டிகளில் ஓட்டுபவருக்கு தனி இடம் இருக்குமாம். அதன் பிறகு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் வலது பக்கத்தை பயன்படுத்தினாலும்,

வலது பக்க ஸ்டீயரிங் அமைப்புடன் வந்தன. முதல்முறையாக ஃபோர்டு மாடல் டி கார் இடதுபக்கம் ஸ்டீயரிங் வீல் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. அதுவே வலது பக்க பயன்பாட்டு நடைமுறை கொண்ட நாடுகளுக்கு ஏதுவானதாக கருதி பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.


அதே நேரத்தில், பிரிட்டனும், அதன் காலனி ஆதிக்க நாடுகளும் தொடர்ந்து இடதுபக்க சாலையில் செல்லும் நடைமுறையை பயன்படுத்தியதோடு, வலது பக்க ஸ்டீயரிங் அமைப்பு கொண்ட கார்களை பயன்படுத்தின. 

இடது மற்றும் வலப்பக்கம் சாலையை பயன்படுத்தும் நடைமுறைக்காக பல நாடுகள் சட்டங்களை இயற்றின.

1792ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சாலையின் வலது பக்கத்தை பயன்படுத்து மாறும், 1804ம் ஆண்டு நியூயார்க் நகரில் சாலையை வலதுபக்கம் பயன்படுத்துமாறும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

ரஷ்யா, போர்ச்சுகள் உள்ளிட்ட நாடுகளும் வலது பக்கத்துக்கு மாறின. பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு போட்ட உத்தரவு போன்றே, 

1938ம் ஆஸ்திரியாவை பிடித்த ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர், அந்நாட்டில் உடனடியாக சாலையில் வாகனங்கள் வலது பக்கத்தை பயன்படுத்த உத்தர விட்டார்.

கால அவகாசம் எதுவும் இல்லாமல் போடப்பட்ட ஹிட்லரின் உத்தரவால், ஆஸ்திரியாவில் வாகன ஓட்டிகளிடையே பெரும் குழப்பமும், பிரச்னையும் ஏற்பட்டது. 

கடைசியாக ஸ்வீடன் நாடுதான் வலதுபக்க சாலை பயன்பாட்டு நடைமுறைக்கு மாறியதாக தகவல் இருக்கிறது. 1924ம் ஆண்டு ஜப்பான் நாடு இடதுபக்கம் செல்வதற்கான சட்டம் இயற்றியது. 

எந்தவொரு காலனி ஆதிக்கத்திலும் சிக்கா விட்டாலும், அந்நாட்டில் மேற்கொள்ள ப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகளில் பிரிட்டிஷ் பொறியாளர்களே ஈடுபட்டனர்.

இதனால், அவர்கள் தங்களது சொந்த நாட்டில் இருப்பது போன்றே, ஜப்பானிலும் சாலையின் இடதுபக்கம் வாகனங்கள் செல்வதற் கான கட்டமை ப்புடன் சாலைகளை உருவாக்கினர்.

இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? அடுத்தவருக்கு தொந்தரவு தராமலும், பாதுகாப்பாகவும் பயணித்தால் சரி.
Tags:
Privacy and cookie settings