தமிழகத்தில் ஆண்கள் இருவர் வீட்டுக்குள் தம்பதிகளாக வும் ஊருக்குள் நண்பர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து இவர்கள் தமிழகத்தி லிருந்து வெளி வருகின்ற விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளனர்.
அதிலிருந்து… பெரம்பூரில் பஸ் நிலையத்தை ஒட்டியிருக்கும் சிறு வீட்டில் வசிக்கிறார்கள் ராஜாவும், ஜோனும்.
வெளியில் நண்பர்களாக அறிமுகமாகியுள்ள இருவரும் வீட்டுக்குள்ளே தம்பதிகளாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள். ராஜா அம்மன் பக்தர். கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்குகிறது.
சமையல் தொடங்கி, சகல வேலைகளையும் ராஜா தான் செய்வாராம். பெயரை, தன் கணவனுக்காக ராஜ சுலோக் ஷனா என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்.
பத்து வயசிலேயே எனக்குள்ள பெண்மை இருக்கிறதை நான் புரிஞ்சுக் கிட்டேன். ஆனா, அதை எப்படி வெளிக்காட்டுற துன்னு தெரியலே. வீட்டுல சொல்லக்கூடிய நிலையும் இல்லை.
14 வயது சிறுவனை இழுத்து கொண்டு ஓடிப் போன 26 வயசு டீச்சர் !
எனக்கு ஒர் அக்கா, ஒரு தங்கச்சி. அவங்க வாழ்க்கை பாதிச்சிடுமேங்கிற பயம். எல்லா உணர்வையும் மனசுக்குள்ளேயே வச்சு தச்சுக்கிட்டு நடைப்பிணம் போல வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.
என்னை மாதிரியே சில சகோதரிங்க தொடர்பு கிடைச்சுச்சு. என்னால அவங்கள மாதிரி குடும்பத்தை விட்டுட்டு சுதந்திரமா போக முடியலே. படிப்பு ஏறலே.
ஒரு நிறுவனத்தில ஓபீஸ் போயாக வேலைக்குச் சேர்ந்தேன். எல்லாருமே என்னைத் தவறா பார்த்தாங்க.
பேசுனாங்க. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ஆம்பிளையா உலவினாலும், மனசுக்குள்ள பரிபூரணமான ஒரு பெண்ணா தான் இருந்தேன்.
அபிராமி தியேட்டர்ல மூணு வருஷம் முன்னாடி தான் இவங்களைப் பாத்தேன். மத்தவங்க பார்த்த பார்வைக்கும், இவங்க பார்த்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் தெரிஞ்சுச்சு.
உங்க பேர் என்னன்னு கேட்டாங்க. சொன்னேன். சினிமாவைப் பார்க்காம என்னையே பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. படம் முடிஞ்சதும் உன் போன் நம்பரைக் கொடுன்னு கேட்டு வாங்கினாங்க.
மறுநாள் பேசினாங்க. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டேன். இல்லேன்னாங்க. அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”ன்னு கேட்டேன்.
உணவுப் பஞ்சத்தில் சூடான் - நெஞ்சை உலுக்கும் உடலுடன் !
காமெடி பண்ணாதடா… ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருப்போம்ன்னு சொல்லிட்டு வச்சுட்டாங்க. ஆனா, என்னால இருக்க முடியலே.
ஒரு நாள், அவங்க வீட்டுல போய் நின்னேன்.. என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போயிட்டாங்க..எனக்கும் இவன் மேல ஈர்ப்பு இருந்துச்சு.
ஆனா, இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா? வீட்டுக்கு வந்தவனை பிரண்ட்னு சொல்லி அறிமுகம் செஞ்சேன். அதுக்குப் பிறகு நிறைய வெளியில சுத்துனோம். விதவிதமா பரிசுப்பொருட்களை கொடுப்பான்.
அவங்க வீட்டுக்கும் கூட்டிக் கிட்டுப் போவான். யாரும் எங்களை சந்தேகத்தோட பார்க்க மாட்டாங்க.
ஒரு முறை, எனக்கு தாலி கட்டியே ஆகனும்ன்னு நின்னான். வெளியில வரும் போது கழட்டி வச்சிடனும்”ங்கிற உறுதி மொழியோட நண்பர்கள் முன்னிலையில தாலி கட்டினேன்.
அதுக்குப் பின்னர், திருட்டுத்தனமான வாழ்க்கை வேணான்னு முடிவு செஞ்சோம். இந்த வீட்டைப் பிடிச்சோம். வெளியில யாருக்கும் எங்க உறவு தெரியாது.
ஆனா, வீட்டுக்குள்ள நாங்க கணவன் மனைவி. எம்மேல உயிரையே வச்சிருக்கான் ராஜா. ஒரு பெண்ணால இப்படியொரு வாழ்க்கையை எனக்குத் தர முடியாது.
லெஸ்பியன் தம்பதி திருமணத்துக்கு மண்டபம் தர மறுத்த உரிமையாளர் !
என்னை உபசரிக்கிற தாகட்டும், எனக்கான தேவைகளை நிறைவு செய்யிறதாகட்டும், அவ்வளவு சந்தோஷமா செய்வான். எங்க அப்பா, அம்மாவை அத்தை மாமான்னு தான் கூப்பிடுவான்.
எனக்கு கல்யாணத்தை இன்ட்ரஸ்ட் இல்லைன்னு வீட்டுல சொல்லிட்டேன். ராஜா, நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான். மீன் குழம்பும், தோசையும் செஞ்சா, எண்ணிக்கை மறந்து சாப்பிடலாம்… என்கிறார் ஜோன்.
“எனக்காக, உறவுகளையே விட்டுட்டு வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்காங்க. இவங்களுக்கு நான் வேற என்ன செய்ய முடியும்..?
காலம் முழுவதும் அவங்களை கஷ்டப்படாம வச்சுக்கனும்.. என்று நெகிழ்ந்து சொல்கிறார் ராஜா என்கிற ராஜசுலோக்ஷனா.
ஜோன் – ராஜா போல, சென்னையில் நிறைய தம்பதிகள் வாழ்கிறார்கள்” என்கிறார் இந்தியன் கம்யூனிட்டி வெல்பேர் ஆர்கனிசேஷன் இயக்குநர் ஹரிகரன்.
ஒருபால் ஈர்ப்பு உள்ளவர்கள் பல்வேறு மட்டங்களில் இருக்கிறார்கள்.பெண் ஈர்ப்பாளர்கள், ஆண் ஈர்ப்பாளர்கள், திருநம்பிகள் என பலவகையினர் இருக்கிறார்கள்.
மேல்தட்டு, அடித்தட்டு வர்க்கங்களில் உள்ள ஒருபால் ஈர்ப்பாளர்கள், தக்க இணைகளோடு வாழும் நிலை உருவாகியிருக்கிறது.
நடுத்தர வாழ்க்கையில் உள்ள ஒருபால் ஈர்ப்பாளர்கள் தான் ஒருங்கிணைப்பு இல்லாமல் வாழ்கிறார்கள். இதுமாதிரியான வாழ்க்கை வெகுஜன சமூகத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.
ஆனால், இந்த விளைவை மாற்ற முடியாது. எனவே தகுந்த விழிப்புணர்வை உருவாக்குவது ஒன்றே நாம் செய்யக்கூடிய செயல்..” என்கிறார் ஹரிகரன்.